‛பிகினி கில்லர்’.. 1970களில் ஆசியாவை அலறவிட்ட சார்லஸ் சோப்ராஜ் விடுதலை.. யார் இவர்? ஷாக் தகவல்
டெல்லி: 1970 காலக்கட்டத்தில் ஆசிய நாடுகளை அலறவிட்ட பிரான்சை சேர்ந்த ‛பிகினி கில்லர்' சார்லஸ் சோப்ராஜ் நேபாள நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது. வயோதிகள் மற்றும் உடல்நலக்குறைவை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் 1944ல் பிறந்தவர் சார்லஜ் சோப்ராஜ் (வயது 78). இவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் வியட்நாமை சேர்ந்தவர். இந்நிலையில் தான் இளம் வயதில் சார்லஜ் சோப்ராஜ் பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்று வாழ தொடங்கினார்.
அந்த வேளையில் அவர் சிறிய சிறிய குற்றங்களை செய்ய தொடங்கினார். அதாவது திருட்டு, மோசடியில் அவர் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினார். அதன்மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழவும் துவங்கினார்.

பிகினி கில்லராக மாற்றம்
அதன்பிறகு 1970 காலக்கட்டத்தில் சார்லஜ் சோப்ராஜ் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணிக்க தொடங்கினார். இந்த பயணத்தின்போது அவர் பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபட தொடங்கினார். குறிப்பாக தொடர்ந்து கொலைகளை செய்ய தொடங்கினார். குறிப்பாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொலைகளை அரங்கேற்ற துவங்கினார். முதல் முதலாக தாய்லாந்தில் பெண் சுற்றுலா பயணி பிகினி ஆடை அணிந்திருந்தார். இந்த வேளையில் அவரை சார்லஸ் சோப்ராஜ் கொலை செய்தார். இதையடுத்து அவர் பிகினி கில்லர் என அழைக்கப்பட்டார்.

அலறிய ஆசியா
மேலும் 1970 காலக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் இருந்து இயற்கையை ரசிக்கவும், ஆன்மிக நோக்கத்துக்காகவும் ஏராளமானவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த சமயத்தில் அவர்களிடம் கனிவாக பேசும் சார்லஜ் சோப்ராஜ் அவர்களுக்கு விஷம் கொடுத்தும், அடித்து கொலை செய்வார். அதன்பிறகு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பயன்படுத்தி பிற நாடுகளுக்கு சென்று அங்கு கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆசியாவின் பல நாடுகளில் அவர் தொடர்ந்து கொலைகளை அரங்கேற்றி போலீசில் சிக்காமல் சுற்றி திரிந்தார். இதனால் ஆசியாவை அலறியது.

இந்தியாவில் சிறை தண்டனை
இவர் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம் உள்பட பல நாடுகளில் 30க்கும் அதிகமான கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை 12 கொலைகள் மட்டுமே சாட்சியங்களுடன் நிரூபணமாகி உள்ளன. இவ்வாறு கொடூரமான கொலைக்காரராக அறியப்படும் சார்லஸ் சோப்ராஜ் தான் செய்த குற்றத்துக்கா இந்தியாவின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் இந்திய சிறையில் தண்டனைக் கைதியாய் 1976 முதல் 1997 வரை அடைக்கப்பட்டு இருந்தார். 1976ல் முதல் முறையாக டெல்லியில் சிக்கி சிறைக்கு சென்றார். அதன்பிறகு 1986ல் சிறையில் இருந்து தப்பிய அவர் கோவாவில் சுற்றி திரிந்தார். அங்கு அவரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

நேபாளத்தில் சிறை தண்டனை
இந்தியாவில் தண்டனை முடிவடைந்த பிறகு நேபாள நாட்டில் நடந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004 முதல் நேபாள நாட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை செய்த நீதிமன்றம்
இதனை கருத்தில் கொண்ட நேபாள நாட்டின் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி இன்னும் சில நாட்களில் அவர் விடுதலையாக உள்ளார். சிறையில் இருந்து விடுதலையாக உள்ள சார்லஜ் சோப்ராஜூவுக்கு தற்போது 78 வயது ஆகும். இவர் சிறையில் இருந்து வெளியான பிறகு அடுத்த 15 நாளில் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் தொடர்பாக ஏராளமான ஏராளமான ஆவணப் படங்கள், திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களாக வந்துள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications