இந்த பொறப்பு தான்! 7 வருடம் முதலிடத்தில் ’பிரியாணி’! சறுக்கிய மசாலா தோசை! டஃப் கொடுக்கும் சமோசா!
டெல்லி : தமிழகத்தில், இந்தியாவில் ஏன் உலக அளவில் எங்கு சென்றாலும் எல்லோரும் முதலில் தேடுவது பிரியாணியை தான். இப்படி எல்லோருக்கும் பிடித்தமான உணவான பிரியாணி ஏழு ஆண்டுகளாக சத்தம் இல்லாமல் ஒரு சாதனை செய்திருக்கிறது.
அந்த காலங்களில் தீபாவளி பொங்கலுக்கு மட்டுமே நல்ல நாள் என்று இட்லி தோசையோடு கறி குழம்பு வைத்து சமைப்பார்கள். அப்போதைய 80ஸ் 90ஸ் கிட்ஸ் அதனை மிகவும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருப்பார்கள்.
ஆனால் காலச்சக்கரம் வேகமாக சுழன்று வரும் இந்த காலத்தில் சமைக்க கூட தேவையில்லை வீட்டில் இருந்தபடியே நினைத்ததை நினைத்த நேரத்தில் சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஆன்லைன் யுகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது.

பிரியாணி
வீட்டிலிருந்தபடியே நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்து சாப்பிடலாம். பெரும்பாலானோர் விரும்புவது பிரியாணியை தான். பிரியாணியில் ஏராளமான வகைகள் உள்ளது. திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, வடி சாதம் பிரியாணி என பல வகைகள் இருக்கிறது. சென்னையில் எங்கு தடுக்கி விழுந்தாலும் பிரியாணி கடைகளை பார்க்காமல் எழுந்து நடக்க முடியாது.

7 ஆண்டுகள் முதலிடம்
வாரத்தில் இரண்டு நாட்களாவது பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற மனநிலையில் கூட பலர் இருக்கிறார்கள். அப்படி இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான பிரியாணி ஏழு ஆண்டுகளில் சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்திருக்கிறது. என்ன தெரியுமா? 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிக ஆர்வத்தோடு ஆர்டர் செய்த உணவு வகைகள் பட்டியலில் பிரியாணி இந்த ஆண்டு முதல் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பிரியாணி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ஆர்டர்
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2022ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிக அளவில் ஆர்கேட் செய்த உணவுப் பொருட்களின் தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 137 வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பிரியாணியை ஆர்டர் செய்கின்றனர். இது சராசரியாக ஒரு நொடிக்கு இரண்டு அல்லது மூன்று பிரியாணி ஆகும். அதிலும் சிக்கன் பிரியாணியை மக்கள் அதிக அளவில் விரும்பி இருக்கிறார்கள் என இந்த தரவரிசை பட்டியலில் தெரிய வந்திருக்கிறது.

மசாலா தோசை
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மசாலா தோசை, சிக்கன் பிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை உள்ளன. இதனால் சைனீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகளை விட பிரியாணியைத் தான் இந்தியர்கள் அதிகம் விரும்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் மற்றொரு தகவலும் இருக்கிறது. சில இந்தியர்கள் வெளிநாட்டு உணவு பொருட்களை அதிக அளவில் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.

சமோசா முதலிடம்
அந்த வகையில் இட்டாலியன் பாஸ்தா, பீசா, மெக்ஸிகன் பவுல், ஸ்பைசி ரெகமெண்ட், சுச்சி உள்ளிட்ட பட்டியலும் இந்த தர வரிசையில் இடம் பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட இந்தியர்கள் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகள் பட்டியலில் சமோசா முதலிடத்தில் இருக்கிறது. நான்கு மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து பாப்கான், பாவ் பாஜி, பிரெஞ்ச் ப்ரைஸ், கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ், ஹார்ட்விங்ஸ் தாட்கோ உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications