பாஜக நாடாளுமன்ற குழு திடீர் மாற்றம்! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திடீர் நீக்கம்.. ஏன் தெரியுமா?
டெல்லி: பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கட்சி பதவிகள் முதல் அமைப்பு ரீதியாகவும் அதிரடியாக நிர்வாகம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் கொண்ட புதிய குழுவை பாஜக தற்போது அறிவித்துள்ளது.

ஜேபி நட்டா, பிரதமர் மோடி
பாஜகவில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கொண்டுள்ளது. தற்போது இந்த குழு நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

புதிதாக யாரெல்லாம் சேர்ப்பு?
புதிதாக கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, லோக்சபா எம்பி சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி பிரிவு தலைவர் லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ், சத்தியநாராயண் ஜாதியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு பொறுப்பு
மேலும் மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் தேசிய பொது செயலாளர் பூபேந்திர யாதவ், ஓம் மாத்தூர், பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவரான தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (சிஇசி) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேன், ஜுவல் ஓரான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் மத்திய தேர்தல் கமிட்டின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் ஏன்?
பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றம் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் கூறும்போது, ‛‛சமூக ரீதியகாவும், பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற குழு என்பது பாஜக கட்சி சார்ந்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications