நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்.. தமிழ்நாடு வரும் ஜெபி நட்டா.. காரைக்குடியில் முக்கிய ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இவரது வருகையின் போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. அதேபோல் குஜராத் தேர்தல் பணிகள் ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் தேசிய அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பாஜக சார்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக பல்வேறு மாநிலங்களிலும் தொகுதி வாரியாக குழு அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்யும் நோக்கில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெபி நட்டா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் வரும் ஜெபி நட்டா

தமிழகம் வரும் ஜெபி நட்டா

இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக ஜெபி நட்டா தமிழ்நாடு வருகிறார். மதுரைக்கு வரும் ஜெபி நட்டா, செப்.22,23 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். வரும் 22ம் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜெபி நட்டா காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்ஏஎம் மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்.

காரைக்குடி பொதுக்கூட்டம்

காரைக்குடி பொதுக்கூட்டம்

தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்ஜிஓ காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இதனைத்தொடர்ந்து செப்.23ம் தேதி காலை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் காரைக்குடி மகாலில் 11 மணிக்கு பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+