குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டி
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை இன்று பாஜக வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் குஜராத் முதல்வர் பூபேந்திர யாதவ் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது.
2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பாஜகவின் 24 ஆண்டு ஆட்சி
இந்த மாநிலத்தில் பாஜக தற்போது ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதுதவிர தற்போது புதிதாக ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக குஜராத்தை கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்து வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்த அகற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

மோடி-அமித்ஷா சொந்த மாநிலம்
ஆனால் ஆட்சியை பறிக்கொடுக்காமல் தொடர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பாஜக மிகவும் கவனமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை செய்து வேட்பாளர்களை தேர்வு செய்தனர். ஏனென்றால் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத்தாகும். இந்த தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்வதில் இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது.இதனால் தான் துவக்கம் முதலே இருவரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

160 பேரின் பட்டியல் வெளியீடு
அதன்படி குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 160 தொகுதிகளில் போட்டியிடும் நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். குஜராத் முதல்வராக உள்ள பூபேந்திர படேல் கட்லோடியா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். உள்துறை அமைச்சராக உள்ள ஹர்ஷ் சங்கவி மஜூரா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஜடேஜாவின் மனைவி போட்டி
அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரிவாபா கடந்த 2019 ல் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். இதுதவிர காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த ஹர்த்திக் படேல் விரம்கம் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications