ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு? தகுதி நீக்கம் செய்ய லோக்சபாவில் பாஜக நோட்டீஸ்.. பின்னணி
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே லோக்சபாவில் நோட்டீஸ் வழங்கி உள்ளார். இந்த நோட்டீஸின் பின்னணி பற்றி பரபரப்பபான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த்ததை சுட்டிக்காட்டி கடும் வார்த்தைகளால் மத்திய அரசை சாடினார்.
இந்தியாவை விற்றுவிட்டீர்கள்
இதுதொடர்பாக ராகுல் காந்தி, ‛‛இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது. நம் நாட்டை விட அமெரிக்கா தான் அதிக பலம் பெறும். நம் நாட்டின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நம் நாட்டுக்கான முடிவை பிரதமர் மோடிக்கு பதில் டிரம்ப் தான் எடுக்கிறார்.
மத்திய அரசு நம் நாட்டை அமெரிக்காவிடம் விற்றுவிட்டது. நம் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். வெட்கமே இல்லையா? என்று கடுமையாக பேசினார். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் நேற்று அனல் பறந்தது.
பாஜக எம்பி நோட்டீஸ்
இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே Substantive Motion அடிப்படையில் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த நோட்டீஸ் என்பவர் மூலமாக பதவியில் உள்ள முக்கிய நபரின் மீது நடவடிக்கையை கோர முடியும். அந்த வகையில் தான் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை போடும் வகையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நோட்டீஸில் இருப்பது என்ன?
இதுபற்றி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வழங்கிய நோட்டீஸில், ‛‛ராகுல் காந்தி ‛தி சோரோஸ்' அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் USAID உடன் தொடர்பு வைத்துள்ளார். தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். உறுதியான ஆதாரங்கள் இன்றி மத்திய அரசின் கண்ணியத்தை குறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.
தகுதி நீக்க வேண்டும்
நம் நாட்டுக்குள் இருந்தே இந்தியாவை சீர்க்குலைக்கும் குண்டர் கும்பலின் முக்கிய அங்கமாக ராகுல் காந்தி மாறி உள்ளார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆதாரமற்ற குற்றசசாட்டுகளை கூறி வருகிறார்.
மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு ராகுல் காந்தியின் இத்தகைய செய நம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, அரசியலமைப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிரானதாக உள்ளது. இதனை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் அவரை பதவி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூறிய கருத்து
மேலும் நிஷிகாந்த் துபே கூறுகையில், ‛‛ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக நோட்டீஸ் வழங்கி உள்ளேன்'' என்றார்
இதுபற்றி காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், ‛‛பாஜகவின் செயல்பாட்டை நாடு பார்க்கிறது. நிஷிகாந்த் துபே செய்வது கவனத்தை திசைதிருப்பும் செயலாகும். பாஜக தன்னை தற்காத்து கொள்ள இப்படி செய்கிறது. எந்த வகையிலும் இது ராகுல் காந்தியை பாதிக்காது'' என்றார்.
என்ன நடக்கும்?
தற்போது ராகுல் காந்திக்கு எதிராக Substantive Motion நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் அது இன்னும் ஏற்கப்படவில்லை. இந்த நோட்டீஸ் ஏற்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பாக விவாதம் நடத்தப்படும்.
அந்த விவாதத்துக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது தான் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விஷயத்தில் லோக்சபா என்ன முடிவு எடுக்கிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரிதான விஷயம்
நாடாளுமன்றத்தில் Substantive Motion தீர்மானம் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1997 ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தர பிரதேச அரசியல் நிலைமை மற்றும் அப்போதைய ஆளுநர் ரோமேஷ் பண்டாரியின் செயல்பாடு தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸை அப்போதைய சபாநாயகர் பிஏ சங்மா ஏற்றார். உத்தர பிரதேசத்தில் பாஜக முதல்வர் கல்யாண் சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றி ஆளுநர் ரோமேஷ் பண்டாரி டிஸ்மிஸ் செய்தார்.
அதன்பிறகு காங்கிரஸின் ஜெகதாம்பிகா பால் முதல்வரானார். இதனால் பாஜகவினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது தான் அதன் நோக்கமாகும். ஆனால் அதற்குள் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் பாஜகவின் கல்யாண் சிங் ஆட்சி உத்தரபிரதேசத்தில் கொண்டு வரப்பட்டது. இப்படியான சூழலில் தான் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அத்தகைய நோட்டீஸ் வழங்கி உள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications