டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய பட்ஜெட்.. பிப்.,1ல் தாக்கல் செய்யப்படுவது ஏன் தெரியுமா? பின்னணியில் இப்படி ஒரு காரணமா? ஆஹா

இந்தியாவில் பல ஆண்டு காலமாக பிப்ரவரி மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக பிப்ரவரி 1ல் பட்ஜெட் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கடந்த 2017 ம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேதி மாற்றத்தின் பின்னணியில் சுவாரசியமான காரணம் உள்ளது. அது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியின் 2.O ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். வரி குறைப்பு, வெவ்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட்டை தான் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். இன்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார்.

மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ! மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ!

பட்ஜெட் நேர மாற்றம்

பட்ஜெட் நேர மாற்றம்

இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை தொடர்ந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 1999ம் ஆண்டு வரை மாலை 5 மணிக்கு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் அமலில் இருந்த இந்த நடைமுறை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மாறாமல் அப்படியே வழக்கத்தில் இருந்தது. அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றியது. பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணியாக மாற்றியது. அதாவது 1999-2000 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்தார். இவர் தான் இந்த புதிய நேரமாற்றத்தை கொண்டு வந்தார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யும் நடைமுறை

பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யும் நடைமுறை

மேலும் கடந்த 2017 ம் ஆண்டுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பட்ஜெட்டானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தார். ஆனால் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகும் கூட இந்த முறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தார். ஆனால் திடீரென்று கடந்த 2017 ல் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி 2017 ல் மறைந்த அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தேதி மாற்றத்தில் சிறப்பு காரணம்

தேதி மாற்றத்தில் சிறப்பு காரணம்

அன்று முதல் இந்திய பட்ஜெட் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரயில்வேக்கான தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு ஒரே பொது பட்ஜெட்டாக மாற்றப்பட்டது. இந்த பட்ஜெட் தேதியை மத்திய அரசு ஏன் மாற்றியது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. யோசித்து இருந்தால் ஓகே. யோசிக்காவிட்டாலும் சரி. உங்களுக்கான விடை இந்த செய்தியில் உள்ளது. அதாவது பட்ஜெட் தேதியை பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து பிப்ரவரி 1க்கு மாற்றியதன் பின்னணியில் சிறப்பு காரணம் ஒன்று உள்ளது.

பின்னணியில் உள்ள முக்கிய காரணம்

பின்னணியில் உள்ள முக்கிய காரணம்

அதாவது பிப்ரவரி கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்தால் புதிதாக பிறக்கும் நிதியாண்டான ஏப்ரல் 1ம் தேதிக்குள் பட்ஜெட் அறிவிப்பின் அம்சங்கள், விதிகளை பின்பற்ற போதிய காலஅவகாசம் இல்லை என்ற புகார் இருந்தது. இதனை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு யோசித்தது. அதன்படியே பிப்ரவரி மாதம் இறுதிக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை அமலுக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றும் நிலையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று 5வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய அவர் தேர்வு செய்த தேதியும் பிப்ரவரி ஒன்றாக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Budget is presented by Finance Minister Nirmala Sitharaman on 1st February every year. Earlier, the budget was presented at the end of February and since 2017, it has been presented on February 1st. There is an interesting reason behind this date change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X