Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழித்து கொள்ளுங்கள்.. எகிறபோகும் ஒமிக்ரான்.. "இந்த ஒரு வேக்சின்தான்" தடுக்கும்.. வைராலஜிஸ்ட் உறுதி

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் இந்தியாவில் விரைவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்று வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் எச்சரித்துள்ளார்.. அதேசமயம், ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்க, கோவாக்சினை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ் அச்சம் அதிகரித்து வருகிறது.. அதேபோல, ஒமிக்ரான் தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது..

இதுவரை நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 பைசர் தடுப்பூசி

பைசர் தடுப்பூசி

மும்பையில் 29 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே பைசர் தடுப்பூசியை 2 முறை செலுத்தியிருக்கிறாரர் என்பது தெரியவந்துள்ளது.. மேலும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பூஸ்டர் டோஸூம் செலுத்தியுள்ளார்... இப்படி 3 டோஸும் அவர் செலுத்தி கொண்டுள்ள நிலையிலும் அவரை ஒமிக்ரான் தாக்கி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இப்படிப்பட்ட சூழலில்தான், வைராலஜி நிபுணர் ஷாஹித் ஜமீல், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நம்பிக்கை தரும் விஷயங்களையும், சில எச்சரிக்கைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில் 3 விஷயங்களை அவர் குறிப்பிட்டு பேசுகிறார்.. அதன்படி, இந்தியாவில் நிச்சயம் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உயரும் என்று உறுதியாக சொல்கிறார்.. 2வதாக கோவிஷீல்டு நமக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பெரிதாக உதவாது என்கிறார், 3வதாக, கோவிஷீல்டை விட கோவாக்சின்தான் ஓமிக்ரானை தடுக்கும் என்றும் திடமாக சொல்கிறார்.

 நோய் தொற்று

நோய் தொற்று

அவர் மேலும் சொல்லும்போது, "பெரும்பாலான இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட கோவிஷீல்ட் மூன்றாவது டோஸாக செயல்படாமல் போகலாம்.. இந்தியா மக்கள்தொகையில் சுமார் 38 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது.. நோய் அறிகுறி நோய்த்தொற்றைப் பாதுகாப்பதில் தடுப்பூசி செயல்திறன் காலப்போக்கில் குறைந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளை எடுத்து கொண்டால் அவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தும் அளவுக்கு சென்றுவிட்டார்கள்.

 இந்தியா

இந்தியா

ஆனால் நாம் இப்போதுதான் 38 சதவீதம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி உள்ளோம்.. தடுப்பூசி செலுத்துவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.. ஒமிக்ரான் போன்ற வைரஸ்கள் தாக்கி வரும் நிலையில், நாம் தடுப்பூசியை அதிகப்படுத்த வேண்டும்.. பூஸ்டரை அதிகப்படுத்த வேண்டும்.. மற்ற நாடுகளில்
கணக்கு வைத்து 2 டோஸ் போட்டுக் கொண்டு 3வது பூஸ்டர் போடுகிறார்கள்.. ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை.. இங்கு தடுப்பூசிகள் குறித்த எந்தவித தீர்மானங்களும் இல்லை..

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
     கோவாக்சின்

    கோவாக்சின்

    2 டோஸ்கள் இங்கு தந்திருந்தாலும்கூட, கோவிஷீல்ட் மட்டுமே அதிக அளவில் அதாவது 90 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.. ஆனால், 3வது டோஸாக கோவிஷீல்ட் போடுவதால் மட்டுமே நோய் எதிர்ப்பு அதிகரிக்கப்போவதில்லை.. அதனால், கோவாக்சினை 3வது பூஸ்டராக பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.. இதுதான் ஒமிக்ரானை கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.. ஆனால், தடுப்பூசி விஷயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒமிக்ரான் பரவல் விரைவில் இந்தியாவில் அதிகரிப்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+