'சிபிஐ, அமலாக்கத்துறை கூண்டு கிளிகள் என யாருங்க சொன்னது'.. சுதந்திரமாக இயங்குகிறது.. பாஜக ஓபன் டாக்
டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதில் அளித்த முக்தார் அப்பாஸ் நக்வி, ''சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் கூண்டுக்கிளிகள் கிடையாது. எந்த பாரபட்சமும் இன்றி இந்த விசாரணை அமைப்புகள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன'' என்றும் கூறியுள்ளார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தனது கைப்பாவை போல பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆளும் பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் அமலாக்கத்துறையும் சிபிஐ அமைப்பையும் ஏவி விடுவதாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல முன்னணி அரசியல் தலைவர்களின் விமர்சனமாக உள்ளது. ஆனால், இந்த விமர்சனங்களை மத்திய அரசு மறுத்து வருகிறது.

கூண்டு கிளிகள் கிடையாது
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வியும் இதே கருத்தை பிரதிபலித்து இருக்கிறார். உத்தர பிரதேசத்தின் மொரதாபாத் நகரில் பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:- ''சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் கூண்டுக்கிளிகள் கிடையாது. சட்டத்தின் அணிகலன்களாக தற்போது இந்த அமைப்புகள் மாறியுள்ளன. எந்த பாரபட்சமும் இன்றி இந்த விசாரணை அமைப்புகள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன'' என்றார்.

அடிப்படை ஆதாரமற்ற
அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முக்தார் அப்பாஸ் நக்வி, ''ஊழல் முறைகேட்டில் சாம்பியன்களான இவர்களுக்கு தற்போது பிரச்சினை எழுந்துள்ளதால், அடிப்படை ஆதாரமற்ற இது போன்ற விமர்சனங்களை விசாரணை அமைப்புகளுக்கு எதிராக முன்வைக்கின்றனர்'' என்றார்.

ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்
உத்தர பிரதேசத்தில் உள்ள மதராசாக்கள் மற்றும் வக்பு வாரிய சொத்துக்களை சர்வே செய்யும் மாநில அரசின் முடிவுக்கு விமர்சனங்கள் எழும்பியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:- ''ஒவ்வொருவரின் அரசியல் அமைப்பு உரிமைகளும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சதிச்செயலில் பி.எப்.ஐ உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. எனவே, இதுபோன்ற தீங்கும் விளைவிக்கும் அமைப்புகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர்
தங்களின் பாதுகாப்பு கேடயமாக மதத்தை பயன்படுத்துபவர்கள்தான் தேசத்திற்கும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மிகப்பெரிய எதிரிகளாக உள்ளனர்'' என்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications