டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!

இந்தியாவை அச்சுறுத்தி வந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை அச்சுறுத்தி வந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மத்திய அரசு இந்த அதிரடியில் குதித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தடை செய்தனர்

தடை செய்தனர்

இந்தியாவில் உள்ள பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து நிறைய தீவிரவாத செயல்களை செய்து அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்று இந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

எப்போது தொடங்கியது

எப்போது தொடங்கியது

இந்த இயக்கம் 1941ல் தொடங்கப்பட்ட அரசியல் சார்ந்த இயக்கம் ஆகும். அபுல் அலா என்பவர் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின் இந்திய - பாகிஸ்தான் விடுதலைக்கு பின் இந்த அமைப்பு தீவிர அமைப்பாக மாறியது. அதன்பின் அவ்வப்போது, இந்தியா மீது இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வந்தது.

கைது செய்தனர்

கைது செய்தனர்

இந்த நிலையில் சில வாரங்கள் முன் இந்த ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பை சேர்த்த பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 150 ஜமாத் - இ - இஸ்லாமி தீவிரவாதிகள் ராணுவம் மூலம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் தலைவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் ஜமாத் - இ - இஸ்லாமி தற்போது தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கம் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு மிகவும் நெருக்கமான இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது காஷ்மீர் பிரச்சனையில் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

English summary
Central Government bans Jamaat-e-Islami (JeI), as an unlawful association after last week crackdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X