கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு உண்மை கிடையாது.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்!
டெல்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டது உண்மைதான் என ஊடக செய்தி வெளியான நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கொரோனா தாக்கம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்க விளைவுகள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. பொதுவாக தடுப்பூசி போட்ட பின் அந்த நபர்களுக்கு லேசான வலி, மிதமான காய்ச்சல், உடல் வலி, அரிப்பு, ஒவ்வாமை போன்ற சாதாரண அறிகுறிகள் இருக்கும். இந்த நிலையில் நடிகர் ஒருவரின் மரணம் மற்றும் கொரோனா காலத்தில் இளைஞர்களின் திடீர் மரணம் மாரடைப்பு போன்றவற்றை தொடர்பு படுத்தி அவை தடுப்பூசியால் தான் நிகழ்ந்தது என சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.

தீவிரமான பக்க விளைவு
அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளால் மிகத் தீவிர பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மக்களுக்கு அளித்த தடுப்பூசிகளால் சாதாரண அறிகுறிகளை தவிர தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவது உண்மைதான் என ஐசிஎம்ஆர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தின என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ ஒப்புக்கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த ஊடகத் தகவல் முழுக்க முழுக்க பொய்யானது எனவும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக வெளியான அந்த தகவல் மற்றும் அறிக்கை தவறான தகவல்களை கொண்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
இதனால் தடுப்பூசி பக்க விளைவுகள் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா தொடர்பாகவும் தடுப்பூசிகள் தொடர்பாகவும் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், கொரோனா தாக்கம் முழுவதும் தீவிரமாக இருக்கும் நிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொள்ளாதவர்கள் அதனை எடுத்துக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications