டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் தமிழகம்.. கேரளத்தில் புதிய அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளத்தில் புதிய அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி?-வீடியோ

    டெல்லி: கேரளத்தில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

    முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக கூறி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 136 அடியாகக் குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கண்டிப்பாக உத்தரவிட்டது.

    Central Government gives permission to review new dam in Kerala

    இந்த நிலையில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

    என் மனைவியை அண்ணன் பிரித்தார்.. தம்பி அபகரித்தார்.. காங். பிரமுகரை கொன்றவர் பரபர வாக்குமூலம் என் மனைவியை அண்ணன் பிரித்தார்.. தம்பி அபகரித்தார்.. காங். பிரமுகரை கொன்றவர் பரபர வாக்குமூலம்

    எனினும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக கேரள அரசு அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதனால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதை தமிழக அரசு மறுத்துள்ளது. அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்றே தமிழக அரசு கூறுகிறது.

    English summary
    Central government gives permission to review new dam across Mullai Periyar Dam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X