டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, கோவை, செங்கல்பட்டில்.. ஜெட் வேகத்தில் உயருகிறது பாதிப்பு.. ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3,62,727 புதிய வழக்குகளை பதிவு செய்தது.கொரோனா காரணமாக 4,120 உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஏழு நாட்களில் தினசரி புதிய பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் 1.13% ஆக இருந்தது என்றும் தினசரி புதிய உயிரிழப்பு வளர்ச்சி விகிதம் 1.68% ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

வியாழக்கிழமை நிலவரப்படி கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. கோவா அனைத்து இந்திய மாநிலங்களிடையேயும் அதிக நேர்மறை விகிதத்தை(48.1%) கொண்டுள்ளது. புதுச்சேரி 42.5% ஆக இரண்டாவது மிக உயர்ந்த நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளது.

சென்னைக்கு காட்டும் அபாயம்

சென்னைக்கு காட்டும் அபாயம்

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தவிர கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், பாலக்காடு கண்ணூர், மேற்கு வங்கத்தின் பரகனாஸ் வடக்கு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா), டெஹ்ராடூன், (உத்தரகண்ட்), கிழக்கு கோதாவரி (ஆந்திரா) ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்று தரவுகள் சுட்டிகாட்டுகின்றன.

மகாராஷ்டிராவில் குறையும் பாதிப்பு

மகாராஷ்டிராவில் குறையும் பாதிப்பு

அதே வேளையில் மகாராஷ்டிராவின் நாக்பூர், நாசிக், தானே ஜல்கான் மற்றும் சந்திரபூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக ஆறுதல் தெரிவித்துள்ளது. குஜராத்தின் அஹமதாபாத், சூரத், வாரணாசி, கோரக்பூர், மத்திய பிரதேசத்தின் குவாலியர், போபால், இந்தூர் மற்றும் லக்னோ (உத்தரபிரதேசம்), ஆல்வார் (ராஜஸ்தான்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 187 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

கர்நாடகா மோசம்

கர்நாடகா மோசம்

கேரளா, ஒடிசா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் கர்நாடகம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஒன்பது மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, சண்டிகர், உத்தரகண்ட், ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய இடங்களில் தினசரி புதிய பாதிப்புகள் சரிவைக் கண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
The Central Ministry of Health has said that the incidence of corona has been increasing in Chennai, Chengalpattu and Coimbatore in the last two weeks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X