டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விரைவில் வருது கோவின் 2.0... தடுப்பூசி போடும் பணிகள்... வேகப்படுத்தும் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை பிப்ரவரி 20 ம் தேதிக்கு முன்னதாக முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ல் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 2வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட உள்ளது.

Centre Urges States, Union Territories To Speed Up Covid Vaccination

இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஜனவரி 16 ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பிப்ரவரி 13 ம் தேதி இரண்டாவது டோசை போட்டுக் கொள்கிறார்களா னெ்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை கண்காணித்து, அதன் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர்களை கேட்டுக் கொள்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்தவர்களில் 100 சதவீதம் பேர் போட்டுக் கொள்கிறார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர் ஆய்வுக் கூட்டங்களும் மாநில, மாவட்டவாரியாக நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி 20 ம் தேதிக்கு முன் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மார்ச் 6 ம் தேதிக்கு முன் அனைத்து முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தவறியவர்கள், வயது வாரியான பிரிவுகளில் கட்டாயமாக போட்டுக் கொள்ள செய்ய வேண்டும்.

முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு டிஜிட்டல் சான்று வழங்கப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட பிறகு இறுதி டிஜிட்டல் சான்று வழங்கப்பட வேண்டும். விரைவில் கோவின் 2.0 வெர்சன் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Centre on Saturday urged states and Union territories to exponentially increase the pace of coronavirus vaccination and schedule the inoculation of all healthcare workers at least once before February 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X