டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட் நியூஸ்... கொரோனா நோயாளிகள் உயிர் காக்கும் ரெம்டெசிவிருக்கு சுங்க வரி ரத்து.. மத்திய அரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Recommended Video

    ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி வரி ரத்து…. மத்திய அரசு அதிரடி!

    இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாகவே மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.

    அதேபோல சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு? என்ன சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு? என்ன சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

    அக்டோபர் 31 வரை

    அக்டோபர் 31 வரை

    இது குறித்து வருவாய் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுநலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும்போது, ரெம்டெசிவிருக்கு​ ​சுங்க வரி விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, உள்நாட்டுத் தேவை கருதி, ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தடை விதித்திருந்தது.

    சுங்க வரி ரத்து

    சுங்க வரி ரத்து

    இந்நிலையில், நாட்டில் தற்போது இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுவந்த சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் தேவைக்கு ஏற்ற வகையில் ரெம்டெசிவிர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இதன் மூலம் உற்பத்தி செலவு குறையும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    அக்டோபர் 31 வரை

    அக்டோபர் 31 வரை

    இது குறித்து வருவாய் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுநலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும்போது, ரெம்டெசிவிருக்கு​ ​சுங்க வரி விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, உள்நாட்டுத் தேவை கருதி, ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தடை விதித்திருந்தது.

    ரெம்டெசிவர் விலை குறைப்பு

    ரெம்டெசிவர் விலை குறைப்பு

    முன்னதாக, ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்துக் கடந்த வாரம் மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ரெம்டெசிவர் விலையை ரூ. 3500க்குள் இருக்குமாறு குறைக்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று ரெம்டெசிவரை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் விலையை 3500 ரூபாய்க்குள் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Centre Waives Import Duty On Remdesivir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X