Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீட்டாக்கள் இந்தியா வருகை: பிரதமர் மோடி நடத்திய தமாஷ்.. காரணங்களை அடுக்கி விமர்சித்த காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமீபியா நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ''ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு காமெடி நிகழ்வே'' இது என பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கடந்த 1952-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் சீட்டாக்கள் உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டதால், தற்போது அந்த சீட்டாக்களை இந்தியாவில் வளர்க்க தற்போதைய மோடி அரசு முயற்சி மேற்கொண்டது.

இதற்காக தென் ஆப்பிரிகா நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 5 ஆண் 3 பெண் என மொத்தம் 8 சீட்டாக்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சீட்டாக்கள்

சீட்டாக்கள்

அதன்பேரில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் சீட்டாக்களை விட ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் கடந்ந்த மாதம் ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்த சீட்டாக்களை இந்தியா கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. ஆனால் திடீரென தேதி மாற்றப்பட்டு இந்த வகை சீட்டாக்களை பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் சீட்டாக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது.

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

இந்த நிலையில் இன்று காலை இந்த சீட்டாக்கள் இந்தியா கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் இந்த சீட்டாக்களை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'இது ஒரு வரலாற்று சாதனை என்று' கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 1952-ஆம் ஆண்டு சீட்டாக்கள் இனம் இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இனங்களை மீண்டும் இந்தியாவில் வளர்ப்பதற்கு முந்தைய அரசுகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்'' என்று கூறினார்.

மோடிக்கு பதிலடி

மோடிக்கு பதிலடி

பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மற்றும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் மேற்கொள்பட்ட ஒரு காமெடி நிகழ்வே இது என்றார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி கடந்த கால ஆட்சி நிர்வாகங்களின் தொடர்ச்சியை ஏற்றுக்கொள்வது இல்லை. இதற்கு தகுந்த உதாரணம் தான் சீட்டா திட்டம். இந்த திட்டத்திற்காக நான் கடந்த 2010 ஆம் அண்டு மே மாதம் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் சென்று வந்தேன்" என்றார்.

 வெற்றி பெற விரும்புகிறேன்

வெற்றி பெற விரும்புகிறேன்

மேலும் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''கடந்த 2009 முதல் 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் இருந்து சரிஸ்கா வனவிலங்குகள் பூங்காவிற்கு புலிகள் இடமாற்றம் செய்யப்பட்ட போது அழிவு ஏற்படும் என கணிப்புகள் சொல்லப்பட்டன. ஆனால், அது தவறு என்று நிரூபணம் செய்யப்பட்டது. இதேபோன்ற கணிப்புகள் இந்த சீட்டா திட்டத்திலும் கூறப்படுகிறது. எனினும் இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்றார்

 கவனத்தை திசை திருப்பும்

கவனத்தை திசை திருப்பும்

தொடர்ந்து மோடியை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ், ''இன்று பிரதமர் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்ட தமாஷ் நிகழ்வு தேவையற்றது. தேசிய பிரச்சினைகள் மற்றும் ராகுல் காந்தியின் பாத யாத்திரை போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் மற்றொரு முயற்சியே இது'' என்று தெரிவித்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2009-ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+