மீரட் – வாரணாசிக்கு நான் வரவில்லை.. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பயணம் திடீர் ரத்து.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீரட் மற்றும் வாரணாசி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

chief-election-commissioner-gyanesh-kumars-visits-to-meerut-and-varanasi-cancelled

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரின் எதிர்ப்புகளை தாண்டி தன்னிச்சையாக முடிவெடுத்ததாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளது.

அதுமட்டுமின்றி ஞானேஷ் குமார் சட்ட விதிகளை புறக்கணித்து செயல்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் குற்றம்சாட்டி உள்ளன. இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் தான் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று மீரட்டுக்கும், வரும் 28 ம் தேதி வாரணாசிக்கும் செல்ல திட்டமிட்டு இருந்தார். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் மீரட்டில் இன்றும், வாரணாசியில் வரும் 28 ம் தேதியும் இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் அந்த 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ரத்து செய்துள்ளார். இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.

ஆனால், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வெளியான செய்தி, காக்ரோச் ஜனதா கட்சி விதித்துள்ள 48 மணி நேர கெடு போன்ற காரணங்களால் ஞானேஷ்குமார் இந்த பயணங்களை ரத்து செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+