சீனா போட்டுள்ள புதிய திட்டம்.. இந்திய எல்லைக்கு மிக அருகில்.. புதிய கான்கிரீட் கட்டிடங்கள்.. ஏன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், நாகு லா என்ற பகுதியில் புதிய கான்கிரீட் கட்டுமானங்களைச் சீன கட்ட தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே அமைதியான போக்கு இருப்பதில்லை. அதிலும் கடந்த ஆண்டு எல்லையில் சீனா தனது ராணுவத்தைக் குவிக்கத் தொடங்கியது,

குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பிறகு அங்கு நிலைமை மிகவும் மோசமானது. அதன் பிறகு இந்தியா, சீன என இரு தரப்பும் அதிகளவில் எல்லையில் வீரர்களைக் குவிக்கத் தொடங்கின.

எல்லையில் கட்டுமானம்

எல்லையில் கட்டுமானம்

இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில், வடக்கு சிக்கிமில் நாகு லா என்ற இடத்தில் சீன ராணுவம் கான்கிரீட் கட்டுமானங்களைக் கட்ட தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்கள் மூலம் நீண்ட காலம் எல்லைப் பகுதியில் தங்குவது சீனாவின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்

கிழக்கு லடாக்

இந்தக் கட்டுமானங்களை இந்திய எல்லையிலிருந்து வெறும் சில கிலோமீட்டர் தூரத்தில் சீனா கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்திய எல்லைக்கு மிக அருகில் சீனா இதுபோன்ற கட்டிடங்கள் கட்டி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே எல்லைப் பகுதியில் சீன தனது கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது. எல்லையில் சாலை உள்கட்டமைப்பை அந்நாட்டு ராணுவம் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் எல்லையில் ஏதேனும் நிகழ்ந்தால் விரைவாகச் சீன ராணுவத்தால் தேவையான இடத்தை அடைய முடியும். தற்போது கட்டுப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது.

கான்கிரீட் கட்டுமானங்கள்

கான்கிரீட் கட்டுமானங்கள்

அடுத்து வரும் மாதங்களில் எல்லைப் பகுதியில் கடும் குளிர் நிலவும் அதைச் சமாளிக்கும் வகையிலே சீன ராணுவம் இந்தப் புதிய கான்கிரீட் கட்டுமானங்களைச் சீனா எழுப்பத் தொடங்கியுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடங்களைச் சுற்றி அவற்றைச் சுற்றியுள்ள பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கான்கிரீட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இதைச் சீனாவால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மீட்டிங்

மீட்டிங்

முன்னதாக நேற்றுதான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி வரை நடந்த இந்த மீட்டிங்கில், எல்லை பிரச்சினை தொடர்பாக இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+