டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக்கில் பதற்றம்.. பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு அதிரடி அனுமதி.. இந்திய ராணுவத்தின் முக்கிய முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரம்மோஸ் ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவம் அதிரடி அனுமதி வழங்கி உள்ளது.

இந்திய ராணுவத்தில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மீடியம் ரேஞ்ச் வகை ஏவுகணைகள் ஆகும். இது சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூடிய க்ரூஸ் ஏவுகணை வகையை சார்ந்தது.

உலகில் இருக்கும் ஏவுகணைகளில் அதிவேக க்ரூஸ் ஏவுகணை இதுதான். க்ரூஸ் ஏவுகணை என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் கட்டுப்பாட்டுடன் செலுத்த கூடிய guided வகை ஏவுகணைகள் ஆகும்.

லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!

ரஷ்யா தயாரிப்பு

ரஷ்யா தயாரிப்பு

இந்தியாவில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் ரஷ்யா - இந்தியாவின் கூட்டு தயாரிப்பில் உருவானது. ரஷ்யாவின் p -800 onkis வகை ஏவுகணைகளை மையமாக வைத்து அதில் சில மாற்றங்களை செய்து இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்கோவா நதிகளை இணைத்து இதற்கு பிரம்மோஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

என்ன வேகம்

என்ன வேகம்

பிரம்மோஸ் ஏவுகணை மொத்தம் மேக் 4 வேகத்தில் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது ஆகும். இந்த ஏவுகணையை பல வகையில் தாக்குதல் நடத்த பயன்படுத்தலாம். அதன்படி நீர்மூழ்கி கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை ஏவலாம். அதேபோல் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை ஏவலாம். நிலத்தில் இருந்தும் ஏவலாம். அதேபோல் கப்பல்களில் இருந்தும் கூட பிரம்மோஸ் ஏவுகணையையே ஏவ முடியும்.

இந்தியா அனுமதி

இந்தியா அனுமதி

இந்த நிலையில்தான் பிரம்மோஸ் ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவம் அதிரடி அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே பிரம்மோஸ் ஏவுகணைகளை கப்பல்களில் இருந்தும், நிலத்தில் இருந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்தும், விமானத்தில் இருந்தும் பயன்படுத்த பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

செம அதிரடி

செம அதிரடி

இந்த நிலையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை விமானங்களில் இருந்து ஏவ இந்திய ராணுவம் அனுமதி அளித்துள்ளது. அதாவது போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை எடுத்து சென்று, இலக்கை நோக்கி அதை ஏவ முடியும். இப்படிப்பட்ட தாக்குதலுக்கு Air-launched cruise missile என்று பெயர். இதற்குத்தான் இந்தியா தற்போது அனுமதி அளித்துள்ளது.

லடாக் மோதல்

லடாக் மோதல்

சீனாவுடன் லடாக்கில் மோதல் இருக்கும் நிலையில் இந்தியா இதற்கு அனுமதி அளித்து உள்ளது.லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

English summary
China standoff with India: Central Govt nods for BrahMos missiles ALCM attack yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X