டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசரமாக வேண்டும்.. ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க இருக்கிறது. அதிலும் அவசரமாக இந்தியா ரஷ்யாவிடம் இந்த ஆயுதங்களை கேட்டு உள்ளது.

Recommended Video

    Russia -விடம் அவசரமாக 33 விமானங்களை வாங்கும் India.. மாஸ் திட்டம்

    இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்கிறார். மூன்று நாள் பயணமாக இன்று ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்கிறார். இந்திய - சீன எல்லை பிரச்சனை நிலவி வரும் நிலையில் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    இதில் இரண்டு நாட்டு எல்லை பிரச்சனை தொடர்பாக பேச வாய்ப்புள்ளது. அதேபோல் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    826 கிமீ தூரம்.. முழுக்க முழுக்க போர் விமானங்கள், டேங்குகளை குவித்த சீனா.. லடாக்கில் மோசமான நிலை 826 கிமீ தூரம்.. முழுக்க முழுக்க போர் விமானங்கள், டேங்குகளை குவித்த சீனா.. லடாக்கில் மோசமான நிலை

    என்ன கேட்பார்

    என்ன கேட்பார்

    அதன்படி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க இருக்கிறது. அதிலும் அவசரமாக இந்தியா ரஷ்யாவிடம் இந்த ஆயுதங்களை கேட்டு உள்ளது. அதாவது S-400 Triumph missile system எனப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அளிக்கும் சிஸ்டம் ஆகும் இது. இதைதான் இந்தியா கேட்டு இருக்கிறது. இந்த ஆயுதங்களுக்கான ஒப்பந்தங்கள் கடந்த வருடமே போடப்பட்டு விட்டது.

    எப்போது வர வேண்டியது

    எப்போது வர வேண்டியது

    அடுத்த வருடம் இறுதியில்தான் இந்த S-400 Triumph missile system இந்தியாவின் கைக்கு வரும். ஆனால் இந்தியா இந்த வருடமே S-400 Triumph missile system எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறது. அதாவது சம்பிரதாயம் எதையும் பின்பற்ற வேண்டாம். உடனே எங்களுக்கு S-400 Triumph missile systemஐ கொடுங்கள் என்று இந்தியா கேட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இது தொடர்பாக இன்று அழுத்தம் கொடுக்க இருக்கிறார்.

    மிக அவசரம்

    மிக அவசரம்

    இதன் மதிப்பு 5.4 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இதற்கான 75% பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து சீனாவும் இதே S-400 Triumph missile systemஐ வாங்கி இருக்கிறது. இதனால்தான் இந்தியா அவசர அவசரமாக தற்போது S-400 Triumph missile systemஐ டெலிவரி செய்யும்படி ரஷ்யாவிடம் கேட்டுள்ளது.

    இதுதான் பெஸ்ட்

    இதுதான் பெஸ்ட்

    S-400 Triumph missile system என்பது ஏவுகணைகளை நடு வானில் தாக்கி அழிக்கும் ஆயுதம் ஆகும். உலகிலேயே வேகமாக ஏவுகணை தாக்கி அழிக்கும் சிஸ்டம் இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. உலகில் தற்போது பயன்பாட்டால் இருக்கும் ஆன்டி மிஸைல் சிஸ்டம்களில் இதுதான் நம்பர் ஒன். இதனால்தான் S-400 Triumph missile systemஐ எப்படியாவது வாங்க வேண்டும் என்று இந்தியா உறுதியாக உள்ளது.

    எத்தனை விமானம்

    எத்தனை விமானம்

    இன்னொரு பக்கம் ஷ்யாவிடம் இருந்து இந்தியா மிக் -29 மற்றும் சுகோய் -30 எம்கேஐ விமானங்களை வாங்க இருக்கிறது. மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது என்கிறார்கள். இந்தியா மொத்தம் 21 மிக் -29 விமானங்களை வாங்குகிறது. அதேபோல் 12 சுகோய் -30 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் எல்லாம் அதி நவீனமாக அப்டேட் செய்யப்பட்ட விமானங்கள் ஆகும். புதிய தொழில்நுட்பத்துடன், அதிக சக்தியோடு இந்த விமானங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    English summary
    China standoff with India: India to buy S -400 anti-missile system from Russia in Fastrack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X