டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சூப்பர் கேரியர்".. இந்தியாவிற்காக அமெரிக்கா களமிறக்கிய ராட்சச போர் கப்பல்.. சீனாவிற்கு அதிரடி செக்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தோ - பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா களமிறக்கி இருக்கும் நவீன போர் கப்பல் சீனாவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

Recommended Video

    India-வுக்காக America களமிறக்கிய ராட்சச போர் கப்பல் | USS Theodore Roosevelt

    இந்தியா - சீனா இடையிலான சண்டை உலக அளவில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா என்று உலக நாடுகள் இதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    மூன்றாம் உலக போருக்கு கூட இந்த மோதல் வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள். இதில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்? சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்?

    நிலை என்ன

    நிலை என்ன

    இந்தியா - சீனா சண்டையில் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று நேற்றுதான் அமெரிக்கா தெரிவித்தது. சீனா தனது எல்லையில் இருக்கும் நாடுகள் மீது மோசமாக அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது. இதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்கும் வகையில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்க படைகளை ஆசியாவிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    போர் கப்பல்

    போர் கப்பல்

    இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் படைகள் ஆசியாவிற்கு வரலாம் என்ற நிலையில் சீனாவிற்கு இன்னொரு விஷயம் பெரிய உறுத்தலாக மாறி உள்ளது. பசிபிக் கடலில் அமெரிக்கா களமிறக்கி உள்ள மூன்று போர்க்கப்பல்கள்தான் இதற்கு காரணம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த மூன்று போர் கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காக களமிறக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது .

    மூன்று கப்பல்கள்

    மூன்று கப்பல்கள்

    மொத்தமாக இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த மூன்று போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. சரியாக மூன்று வருடங்களுக்கு பின் அமெரிக்க கடற்படை இப்படி இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்துகிறது. இதற்கு முன் வடகொரியா பிரச்சனை உச்சத்தில் இருந்த போதுதான் இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா போர் கப்பல்களை நிறுத்தியது. அதன்பின் இப்போதுதான் இப்படி கப்பல்களை அமெரிக்கா அனுப்புகிறது.

    வியட்னாம் அருகே

    வியட்னாம் அருகே

    இதில் ஒரு போர் கப்பல் இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்லைகளில் சுற்றி வருகிறது. இன்னொரு கப்பல் தென் சீன கடல் எல்லையில் பிலிப்பைன்ஸ் அருகே சுற்றி வருகிறது. மூன்றாவதாக மிக முக்கியமான போர் கப்பலான சூப்பர் கேரியர் வகை போர் கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) போர் கப்பல் வியட்னாம் அருகே சுற்றி வருகிறது.இது தென் சீன கடல் எல்லையில் இருக்கிறது.

    என்ன மெசேஜ்

    என்ன மெசேஜ்

    இந்த யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) கொண்டு வரப்பட்டது சாதாரண காரணத்திற்காக இல்லை. இது இந்தியாவிற்கு உதவுவதற்காக என்று பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு நாட்டுக்கு அருகே போர் கப்பலை கொண்டு சென்றால், அது மெசேஜ் என்று கூறுகிறார்கள். அதாவது எதிரி நாட்டுக்கு அளிக்கும் ஒரு செய்தி போன்றது. சீனாவிற்கு யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) மூலம் முக்கியமான செய்தியை அமெரிக்கா அளித்துள்ளது என்கிறார்கள்.

    தயார் நிலை

    தயார் நிலை

    இந்தியா - சீனா இடையே சண்டை வந்தால் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட தயாராக இருக்கிறது என்பதுதான் அமெரிக்கா விடுக்கும் அந்த செய்தி என்கிறார்கள். அதன்படி இந்த யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) ஐ மிக எளிதாக வியட்நாம் பகுதியில் இருந்து இந்தியாவின் எல்லைக்கு கொண்டு செல்ல முடியும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா - சீனா இடையே வங்க கடல் எல்லைக்கு இதை எளிதாக கொண்டு செல்ல முடியும்.

    அரணாக இருக்கும்

    அரணாக இருக்கும்

    இந்தியா - சீனா இடையே போர் வந்தால் சில மணி நேரங்களில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) வங்க கடல் எல்லைக்கு வர முடியும் என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று நேற்று அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இதனால் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) ஐ அமெரிக்கா களமிறக்கியதன் பின்னணி தெளிவாகிவிட்டது, இந்தியாவிற்கு அரணாக இது களமிறக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் .

    அதிக பலம்

    அதிக பலம்

    ஏதாவது பிரச்சனை என்றால் உடனே இந்த போர் கப்பலை அனுப்ப அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் இந்த யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பல் என்று கூறுகிறார்கள். இந்தியா, சீனாவிடம் இருக்கும் பெரிய போர் கப்பல்களை விட 3 மடங்கு பெரிய போர் கப்பல் ஆகும் இது .

    செம அதிரடி

    செம அதிரடி

    இதில் இருந்து ஏவுகணைகளை, அணு ஆயுதங்களை ஏவ முடியும், அனைத்து விதமான போர் விமானங்களையும் இதில் இறக்க முடியும் . அதோடு, இதில் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt ) ஐ வங்க கடலில் இறக்கினால், அது மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.இந்த கப்பல் சீனாவிற்கு பெரிய தொல்லையாக மாறியுள்ளது.

    English summary
    China standoff with India: US deploys USS Theodore Roosevelt in Indo Pacific region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X