டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவறான குற்றச்சாட்டு.. பயமாக உள்ளது.. குடியுரிமை மசோதாவை விமர்சிக்கும் வங்கதேசம்.. உறவில் விரிசலா?

மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்வது போல வங்கதேசத்தில் இந்துக்கள் பிரச்சனைக்கு உள்ளாவது கிடையாது, இங்கு இந்துக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று வங்கதேச அரசு சார்பாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே அப

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்வது போல வங்கதேசத்தில் இந்துக்கள் பிரச்சனைக்கு உள்ளாவது கிடையாது, இங்கு இந்துக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று வங்கதேச அரசு சார்பாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே அப்துல் மோமென் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாக நிறைவேறும்.

சட்டம் எப்படி

சட்டம் எப்படி

இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்துக்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் நன்மைக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு தற்போது வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே அப்துல் மோமென் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் இல்லை

இந்துக்கள் இல்லை

அதில், அமித் ஷா சொல்வது போல எங்கள் நாட்டில் இந்துக்கள் கஷ்டப்படவில்லை. எங்கள் நாட்டில் இந்துக்கள் நன்றாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு தவறானது.

உறவு நன்றாக உள்ளது

உறவு நன்றாக உள்ளது

இந்தியா வங்கதேசம் இடையில் உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சமயத்தில் இந்தியா முக்கியமான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் வங்கதேச மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தங்களுக்கு எதிராக இந்தியா செயல்படுமோ என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

எங்கள் நாட்டில் முக்கியமான முடிவுகளை எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் சேர்ந்துதான் எடுக்கிறார்கள். நாங்கள் எதையும் மதத்தை வைத்து முடிவு செய்தது கிடையாது. இந்தியாவின் இந்த மசோதா குறித்து எங்கள் நாட்டில் நாங்கள் விவாதம் நடத்த இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நல்ல உறவு

நல்ல உறவு

வங்கதேசம் உருவானதில் இருந்தே இந்தியா உடன் அந்நாடு நல்ல உறவை கொண்டு இருக்கிறது. கடந்த சில வாரங்கள் முன் கூட பிங்க் பால் டெஸ்டி போட்டியின் தொடக்க விழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்து இருந்தார். ஆனால் இந்த நெருக்கமான உறவில் தற்போது விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

English summary
Citizenship Amendment Bill: Bangladesh opposes the bill with some strong words for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X