டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மாயபுரியில் இன்று காலை தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கும் போது போலீசாருக்கும், அப்பகுதியினருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தது.

டெல்லி மாயபுரி பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களை மூட உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பசுமைத்தீர்ப்பாயம், அத்தகைய நிறுவனங்களை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது.

Clash broke out between locals & security forces in Delhis Mayapuri

இதன்படி மாயபுரி பகுதியில் பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 850 நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணியினை இன்று காலை டெல்லி அரசு அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் மேற்கொண்டனர்.

அப்போது சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் அப்போது போலீசாருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அந்த இடமே போர்களமாக மாறியது. அப்போது சிலர் போலீசாரை கொடூரமாக தாக்கினார்கள். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டதால் அவர் உயிர் தப்பினார். இந்த வன்முறையில் 15 போலீசார் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Clash broke out between locals & security forces in Delhi's Mayapuri area earlier today after MCD officials began to seal some factories in the area following National Green Tribunal's (NGT) order to seal nearly 850 factories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X