தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் டெல்லி செல்கிறார்? எப்போது? எதற்கு தெரியுமா?
டெல்லி: மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் மூன்றாவது முறையாக டெல்லிக்கு செல்ல போகிறார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அவர் செல்ல போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செப் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி செல்லும் ஸ்டாலின், தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மூன்றாவது பயணம் ஆகும். முதல்வராக பதவியேற்றவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது மரபு . ஆனால் ஸ்டாலன் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தத. இதனால் பிரதமர் மோடியை ஸ்டாலின் உடனே சந்திக்கவில்லை. எனினும் கொரோனா பிரச்சனை கொஞ்சம் குறைந்த பின்னர், துதடுப்பூசிகளை அதிகம் ஒதுக்க வேண்டும் என்று கோரி சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் இரண்டாவது முறை டெல்லி சென்ற குடியரசு தலைவரை சந்தித்து சட்டசபையில கருணாநிதி பட திறப்புக்கு அழைப்பு விடுத்தார். மூன்றாவது முறையாக டெல்லி செல்ல போகும் ஸ்டாலின் இந்த முறை கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க போகிறார். அப்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications