டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிகுந்த வேதனை அளிக்கிறது.. டெல்லி தீ விபத்தில் 27 பேர் பலி.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடந்த தீ விபத்து சம்பவம் வேதனையளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Delhi Fire Accident | பலர் உள்ளே சிக்கியுள்ளனர்.. என்ன நடந்தது? | Oneindia Tamil

    டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. டெல்லி வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்து இரவு வரை தீவிரமாக பரவியது.

    CM Stalin condolences for the fire at 4-Storey Building in Delhi

    டெல்லியில் இருக்கும் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 6 மணி நேர போராட்டத்திற்கு பின்புதான் அங்கு தீ அணைக்கப்பட்டது. தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

    பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    CM Stalin condolences for the fire at 4-Storey Building in Delhi

    இந்த நிலையில் டெல்லி தீ விபத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், டெல்லியில் தீ விபத்து சம்பவம் வேதனையளிக்கிறது. பலர் டெல்லி தீ விபத்தில் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விபத்தில் பலியானவர்களின் என்னுடைய ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவிக்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனே குணமடைய விரும்புகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு சார்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    English summary
    CM Stalin condolences for the fire at 4-Storey Building in Delhi. டெல்லியில் நடந்த தீ விபத்து சம்பவம் வேதனையளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X