கரப்பான்பூச்சி போராட்டம் முடியலை.. இன்று காலை 10 மணிக்கு தான் இருக்கு.. நள்ளிரவில் வந்த வீடியோ
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி நேற்று டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அழைப்பை ஏற்று ஏராளமானோர் போராட்டம் நடத்தி கைதாகினர். இந்த விவகாரம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது என்ற நினைத்த நிலையில் பெரிய ட்விட்ஸ் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பெரிய அளவில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போராட்டத்துக்கு வந்தவர்களை முன்னெச்சரிக்கையாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பல்வேறு இடங்களில் குண்டு கட்டாகவும் போலீசார் கைது செய்தனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.
11 October | Sunday | 10amChalo Jantar Mantar!@Cockroachisback https://t.co/U7Gk8i6fYV
— Ajinkya Shinde (@AjinkyaCJP) October 10, 2026
அதன்பிறகு நேற்று இரவில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் மட்டும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் போராட்டம் இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்லப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்ட 'டாப்' லீடர்கள் கைது செய்யப்பட்டதால் இந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அமைப்பு செயலாளர்அஜிங்கியா ஷிண்டே தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் இன்று மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அஜிங்கியா ஷிண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''இன்றைய தடுப்பு காவல் நடவடிக்கைக்கு பிறகு நாங்கள் வீடு திரும்பி விடுவோம் என்று அரசு நினைத்து இருக்கலாம். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு தற்போது பயம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாங்கள் போராட்டத்தில் பாதியளவுக்கு வென்றுவிட்டோம். ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இன்று முதல் தினமும் டெல்லி ஜந்தரை நோக்கி பேரணி செல்லப்படும்'' எனக்கூறியுள்ளார்.
அதேபோல் எஸ்எஃப்ஐ அமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சாரிா கூறுகையில், ''இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்ட வேண்டும். இதற்கு அனைவரிடமும் ஒற்றுமை வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல் மாணவர் போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அவர்கள் எல்ல இடங்களிலும் அமைதியான முறையில் போராடுவார்கள். காவல்துறை எங்கு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துகிறார்களோ அந்த இடமே ஜந்தர் மந்தராக மாறும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.



Click it and Unblock the Notifications
