52 ஆண்டு வரலாறு.. தேசியக் கொடியை டிபி-யாக வைக்காத ஆர்எஸ்எஸ்.. மறைமுகமாக சாடிய ராகுல் காந்தி!
டெல்லி: சமூக வலைதளங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்காதது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கின் முகப்பு புகைப்படத்தை தேசியக்கொடியாக மாற்றிட பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களுடைய சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.
இதனிடையே இந்தியக் கொடியை தயாரித்து வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே அலுவலகமான கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்தா சங்கத்திற்கு ராகுல் காந்தி சென்று பார்வையிட்டார். அந்த நேரத்தில் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்தை நடத்தும் நபர்கள் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத தேச விரோத அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்றும் தடுக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக 75 ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்னும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் அமைப்புகள் மூலம் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை நாங்கள் எங்கள் வழியில் கையாண்டு வருகிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பான எங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இதுநாள் வரை தேசியக் கொடி ஏற்றியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications