4 மாநிலங்கள், 28 சீட்கள்! ஒன்றில்கூட வெல்லாத காங்கிரஸ்! மோடிக்கும் நிம்மதி இல்லை! அப்போ வென்றது யார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவுக்கு எதிரான மக்கள் மனநிலை அதிகரித்து வருவதாக பேச்சுகள் எழுந்திருந்த நிலையில், காங்கிரஸுக்கு வரவேற்பு அதிகரிப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும், இன்று வெளியான சட்ட மேலவை தேர்தலில் 4 மாநிலங்களில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் ஒரு அவை மட்டுமே உள்ளது. ஆனால், நாட்டின் பல மாநிலங்களில் சட்டமன்றத்திலேயே மேலவை தனியாக இருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா இருப்பது போல பல மாநிலங்களில் சட்டசபையிலும் உள்ளது.

Congress Wins Zero Seats Congress BJP

ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை

இதற்கிடையே உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது. பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி நான்கு இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றன. மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை இந்தியா கூட்டணி தீவிரப்படுத்தி வருகிறது. இது மோடி இமேஜுக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. இது காங்கிரஸுக்கு ஒரு பூஸ்ட்டை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

கர்நாடகா

அதிலும் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் கூட ஆதரவை திரட்ட முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகாவில் 2023ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான சட்ட மேலவை தேர்தலில் நான்கு இடங்களையும் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்த முடிவு முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அக்டோபர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. அமைச்சர்கள் கூட பிரச்சாரத்தில் இறங்கி இருந்தனர். ஆனால், பெங்களூர் ஆசிரியர்கள் தொகுதியில் காங்கிரஸ் வசம் இருந்த இடத்தையும் ஜேடிஎஸ் கைப்பற்றியது. அங்கு காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் புத்தண்ணாவை எதிர்த்து போட்டியிட்ட ஜேடிஎஸ் வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத் 908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரங்கநாத் 10,810 வாக்குகளையும், புத்தண்ணா 9,902 வாக்குகளையும் பெற்றனர்.

தோல்வி

மற்ற மூன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில் ஷஷில் ஜி. நமோஷியும், மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் எஸ்.வி. சங்கனூரும், தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதியில் கே.எம். சுரேஷும் வெற்றி பெற்றனர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த பகுதியான கலபுரகியையும் உள்ளடக்கிய வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில் நமோஷி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2028ல் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வெற்றி பாஜக கூட்டணிக்கு புத்துணர்வை அளிப்பதாக இருக்கிறது.

மற்ற மாநிலங்கள்

உத்தர பிரதேசத்தில் 11 இடங்களுக்கான தேர்தலில் மீரட், பரேலி - மொராதாபாத், லக்னோ தொகுதிகளை பாஜக தக்க வைத்து கொண்டன. அதேநேரம் மோடியின் தொகுதியான வாரணாசி ஆசிரியர்கள் மற்றும் ஆக்ரா ஆசிரியர்கள் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பீகாரில் 8 இடங்களுக்கான தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் பாட்னா ஆசிரியர்கள் தொகுதியையும், பாஜக திர்ஹுத் ஆசிரியர்கள் தொகுதியையும் கைப்பற்றின. பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி தர்பங்கா தொகுதியில் வென்று, சட்ட மேலவையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அங்கு காங்கிரஸ் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் மதன் மோகன் ஜா தோல்வியடைந்தார். சாரண் ஆசிரியர்கள் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் எந்தவொரு இடத்திலும் வெல்லும் சூழலில் இல்லை.

அதேநேரம் சட்டமேலவை தேர்தலில் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளே இருக்கும். இது பெரும்பாலும் உள்ளூர் அரசியல் கணக்குகளை சார்ந்தே இருக்கும் என்கிறார்கள். இதனால் இந்த முடிவுகளை மட்டும் வைத்து கொண்டு தேசிய அளவில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துவிட்டது என சொல்லிவிட முடியாது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+