மதிப்பு கூட்டு பொருட்களின் ஏற்றுமதிக்கு தனி கவுன்சில்... விவசாயிகளும் பயனடைவார்கள்.. அமைச்சர் பேச்சு
டெல்லி: கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அதற்கான தனியாகக் கூட்டுறவு ஏற்றுமதி கவுன்சில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அதற்கென தனியாகக் கூட்டுறவு ஏற்றுமதி கவுன்சிலை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. கவுன்சிலின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் வேளாண்துறை இணை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, வேளாண் துளை செயலாளர் சஞ்சை அகர்வால் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் குமார் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு இயக்கங்களின் முக்கியத்துவம்
அப்போது பேசிய வேளாண் துறை இணை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, கூட்டுறவுகள் வேளாண்மை வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் கூட்டுறவுகளில் இளைஞர்களைக் கவர நாம் இது போன்ற வணிக யுக்திகளைப் புகுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். கூட்டுறவுகள் மூலம் ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் இளைஞர்கள் இன்னும் அதனை நாடவில்லை எனவும் கூட்டுறவு நிறுவனங்களை பெரும்பாலான வயதானவர்களே நிர்வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலேயே வேளாண்மையில் புதுமையைப் புகுத்தி மாற்றங்களைக் கொண்டுவரக் கூட்டுறவு இயக்கத்தால் மட்டுமே இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் முறை
நாட்டிலேயே முதன்முறையாகக் கூட்டுறவுகளுக்கான ஒரு ஏற்றுமதி அமைப்பினை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தியுள்ளது. இக்கழகம் கூட்டுறவுகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஒரு மத்திய அரசு நிறுவனம். இது மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
மேலும் அமைச்சர் பேசுகையில், 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் அமைய வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், நமது விவசாயிகள் கொரானா நோய்த்தொற்று காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி உள்ளனர் எனவும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

விவசாய துறை
மதிப்புக்கூட்டு பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்த கூட்டுறவு ஏற்றுமதி கவுன்சில் பெரும் துணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். வேளாண்மைத் தொழில் நமது நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது என்று தெரிவித்த அவர், ஏறத்தாழ 50 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர் எனவும் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்களின் பங்கு 10 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் 2018-ஆம் ஆண்டு வேளாண்மை ஏற்றுமதி கொள்கையின்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசின் வேளாண் துறை செயலாளர் சஞ்சை அகர்வால், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கூட்டுறவு ஏற்றுமதி கவுன்சில் மூலம் வேளாண் மதிப்புக்கூட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகும் எனவும் இந்த வாய்ப்பினை அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த அமைப்புடன் மீன்வள கூட்டுறவு இணையங்கள். பால்வள கூட்டுறவு இணையங்கள் போன்றவை இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications