டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலறும் இந்தியா.. கதற விடும் கொரோனா.. கொஞ்சமும் அடங்கலை.. ஒரே நாளில் 9,996 பேர் பாதிப்பு..!

ஒரே நாளில் இந்தியாவில் 9996 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே அறிவித்தும் உள்ளது.. இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு மேலும் கிலியை தந்து வருகிறது.

சீனாவில் ஒரு நகரத்தில் மீன்மார்க்கெட்டில் ஆரம்பித்த இந்த கொரோனா இன்று இந்தியா உட்பட உலக நாடுகளை தினம் தினம் கொன்று எடுத்து வருகிறது.

இந்தியாவிலும் இந்த தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... 5வது முறையாக லாக்டவுன் சென்று கொண்டிருக்கிறது.. இதில் தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.. கட்டுப்பாடுகள், சமூக விலகல்கள் என மக்கள் கடைப்பிடித்தபோதிலும், இந்த வைரஸ் தாக்கத்தின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

திணறும் சென்னை.. திணறும் சென்னை.. "எல்லையை இழுத்து மூடுங்க.. கடும் கட்டுப்பாடுகள் தேவை".. ஒரே குரலில் வாசகர்கள் !

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது... இது தொடர்பான அறிக்கையில் உள்ளதாவது: "இந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,996 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,86,579-ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை

சிகிச்சை

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் சிகிச்சை பலனின்றி 257 பேர் உயிரிழந்துள்ளனர்... இதனால் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,102-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,41,029 பேர் உடல்நிலை சரியாக டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 1,37,448-ஆக உள்ளது.

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

இதில் உச்சபச்சமாக மகாரஷ்டிரா மாநிலம்தான் வழக்கம்போல் முன்னிலையில் உள்ளது.. அந்த மாநிலத்தில் 94,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் 36,841 பேர் பாதிப்படைந்துள்ளனர்.. டெல்லியில் 32,810 பேர் பாதிப்படைந்துள்ளனர்" என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

நியூசிலாந்து, தான்சானியா போன்ற நாடுகள் தொற்றே இல்லாத நாடுகளாக உருவெடுத்துள்ள நிலையில், நம் நாட்டில் 8ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இன்னும் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு தேவைப்படுகிறது.. அதேபோல டெஸ்ட்டுகளையும் அதிகரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒத்துழைப்பும்தான் இங்கே உடனடி அவசியமாகிறது!

English summary
corona in india: 9996 new cases in 24 hours corona impact in india
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X