டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மாசம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. முதலில் யாருக்கெல்லாம் கிடைக்கும்- ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் வினியோகத்திற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், மேலும் அவர் கூறியதாவது: 135 கோடி இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஆயத்தமாகி வருகிறோம்.

எந்த பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி கொடுப்பது என்பதை அறிவியல் பூர்வ அடிப்படையில் முடிவெடுப்போம்.

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

முன்கள பணியாளர்கள்

முன்கள பணியாளர்கள்

கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குத்தான் முதலில் மருந்து வழங்கப்படும். இதன்பிறகு, முதியவர்கள் மற்றும், பிற இணை நோய்கள் உள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்குவோம்.

வினியோக ஏற்பாடு

வினியோக ஏற்பாடு

வேக்சின் சப்ளை குறித்து விரிவான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வேக்சின் பற்றி வீடியோ மூலம் ஆலோசிக்க ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளோம். ப்ளூ பிரிண்ட் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

2021 நல்ல ஆண்டு

2021 நல்ல ஆண்டு

மொத்தத்தில், 2021ம் ஆண்டு, அனைத்து மக்களுக்கும் நல்ல ஆண்டாக பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக நடவடிக்கை எடுத்து கொரோனா பாதிப்பை குறைத்துள்ளது.

மோடி முயற்சி

மோடி முயற்சி

மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் மார்ச் மாதம், பிரதமர் மோடி துவங்கிய முயற்சி அருமையானது. மக்களின் பங்களிப்போடு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Health Minister Harsh Vardhan has said that the corona vaccine will be available in India in two or three months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X