மூன்று நாட்களுக்கு பிறகு.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசு கலக்கம்
டெல்லி: இந்தியாவில், கடந்த மூன்று நாட்களாக வைரஸ் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் படுக்கை, ஆக்சிஜன், ரெமிடிசிவிர் மருந்துகளின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, டெல்லியில் இதுவரை சுமார் 40 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை அளிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால், குஜராத்தில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரயில்கள் டெல்லிக்கு வந்துள்ளன.

2ம் தேதி முதல்
அதேசமயம், நாட்டில் கடந்த மே 1ம் தேதி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகில் எந்தவொரு நாட்டிலும் ஒரேநாளில் இப்படியொரு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. எனினும், கடந்த மே 2ம் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வந்தது.

ஆறுதல் தந்த செய்தி
அன்றைய தினம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மே.2ம் தேதி 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக பதிவானது. நேற்று (மே.4) பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

3 நாட்களுக்கு பிறகு
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு கவலை
இதன்மூலம், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா! -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது! -
UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம் -
"இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்" பாராட்டி தள்ளிய அமெரிக்க யூடியூபர்.. டிரெண்டிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல்












Click it and Unblock the Notifications