டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்றுமதியில் பெரும் மோசடி.. தரமற்ற கொரோனா பாதுகாப்பு உடைகள்.. இந்தியாவிடமே வேலையை காட்டிய சீனா!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிற்கு சீனா தரமற்ற பாதுகாப்பு உடைகளையும், கிளவுஸ்களையும் ஏற்றுமதி செய்து ஏமாற்றி உள்ளது.

Recommended Video

    ஏற்றுமதியில் பெறும் மோசடி... தரமற்ற பாதுகாப்பு உடைகளை அனுப்பிய சீனா

    இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவிற்கு தற்போது பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள், மாஸ்குகள், கண்ணாடிகள் ஆகியவை அதிகம் தேவைப்படுகிறது.

    மத்திய அரசின் கணக்குப்படி இந்தியாவிற்கு 3.8 கோடி மாஸ்குகள் மற்றும் 62 லட்சம் பாதுகாப்பு உடைகள் தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் நமக்கு இவ்வளவு உடைகள் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவிடம் இவ்வளவு உடைகள் இல்லை.

    சிங்கப்பூரில் செம கல்லா கட்டும் இந்திய ஹோட்டல்கள்.. கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம் சிங்கப்பூரில் செம கல்லா கட்டும் இந்திய ஹோட்டல்கள்.. கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம்

    சீனாவிடம் ஆர்டர் செய்தது

    சீனாவிடம் ஆர்டர் செய்தது

    இதனால் இந்தியா சீனாவிடம் பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள், மாஸ்குகள் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக போன மாதமே சீனாவிடம் ஆர்டர் செய்து இருந்தது. 1 கோடியே 35 லட்சம் பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள், மாஸ்குகள் (கலவையாக) ஆர்டர் செய்து இருந்தது. அதேபோல் இன்னொரு பக்கம் 15 லட்சம் ராப்பிட் கிட் சோதனை கருவிகளை ஆர்டர் செய்து இருந்தது. இதில் இன்று 6.50 லட்சம் ரேபிட் சோதனை கருவிகள் இந்தியா வந்துள்ளது.

    ஏப்ரல் 5ம் தேதி அனுப்பியது

    ஏப்ரல் 5ம் தேதி அனுப்பியது

    கடந்த ஏப்ரல் 5ம் தேதி சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 1.7 லட்சம் பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள், மாஸ்குகள் வந்து சேர்ந்தது. இதில் 50 ஆயிரம் பாதுகாப்பு உடைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. கொஞ்சம் கூட தரமில்லாமல் இந்த பாதுகாப்பு உடைகள் இருந்தது. சில பாதுகாப்பு உடைகளில் துளைகள், கிழிசல்கள் இருந்துள்ளது. இதனை தர சோதனை செய்ததில் இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

    இறக்குமதி செய்தும் பலன் இல்லை

    இறக்குமதி செய்தும் பலன் இல்லை

    இதனால் இந்த பாதுகாப்பு உடைகள் இறக்குமதி செய்யப்பட பின்பும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. இதை மாற்றி கொடுக்கும்படி இந்தியா சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இன்னும் இதற்கான பேச்சுவார்த்தை முடியவில்லை. கொரோனா பரவி வரும் நிலையில் சீனா இந்தியாவை இப்படி ஏமாற்றியது பெரிய எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

    ஐரோப்பா நாடுகள்

    ஐரோப்பா நாடுகள்

    சீனா இந்தியாவை மட்டும் இப்படி ஏமாற்றவில்லை. இதேபோல் ஸ்பெயின், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் இதேபோல் மோசமான பொருட்களை ஏற்றுமதி செய்து ஏமாற்றி உள்ளது. மேலும் ஜெர்மனிக்கும் சீனா மோசமான பொருட்களை அனுப்பி ஏமாற்றி உள்ளது. இதுவரை அமேரிக்காவிற்கு மட்டுமே சீனா தரமற்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. இதனால் இந்தியா நமது நாட்டிற்கு உள்ளேயே இந்த பொருட்களை உருவாக்க முடிவெடுத்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு

    இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு

    அதன்படி தினசரி 30 ஆயிரம் பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள், மாஸ்குகளை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு உள்ளேயே சிறு சிறு நிறுவனங்கள் மூலம் இதை உருவாக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் தேவைப்பட்டால் சிங்கப்பூர், கொரியா, வியட்நாம், துருக்கி ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் சீனாவிடம் வர்த்தகத்தை இந்தியா குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: China's PPE kits failed in quality tests which exported to India last week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X