டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மிக மிக ஆபத்தானது.. சின்னம்மையை போல வேகமாக பரவுக்கூடியது..' டெல்டா கொரோனாவை கண்டு மிரளும் அமெரிக்கா

Google Oneindia Tamil News

டெல்லி: மற்ற உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் டெல்டா கொரோனா தீவிர பாதிப்பை அதிகம் ஏற்படுத்துவதாகவும், சின்னம்மையைப் போல டெல்டா கொரோனா வேகமாகப் பரவுவதாகவும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil

    கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் பாடாய் படுத்தி வருவது கொரோனா வைரஸ்தான். இதில் வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை எதுவும் தப்பவில்லை.

    கொரோனா வைரஸ் அலை அலையாகத் தாக்குவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து நாடுகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

    1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம் 1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்

    டெல்டா கொரோனா

    டெல்டா கொரோனா

    அதிலும் குறிப்பாக இந்தியாவில் மோசமான கொரோனா 2ஆம் அலை ஏற்படக் காரணமாக இருந்த டெல்டா கொரோனா இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளன. டெல்டா கொரோனாவால் பல்வேறு நாடுகளிலும் அடுத்த ஒரு கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் ஆய்வு மையம் டெல்டா கொரோனா பற்றிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், அந்நாட்டு ஊடகங்களில் லீக் ஆகியுள்ளது. அது டெல்டா கொரோனா குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை கொண்டிருக்கிறது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் அந்த அறிக்கையில் கொரோனா வேக்சின் 2 டோஸை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் கூட வேக்சின் போடாத மக்களுக்கு இணையாக டெல்டா கொரோனாவை பரப்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் முதலில் வெளியிட்ட இந்த அறிக்கையில், டெல்டா கொரோனா மற்ற கொரோனா வகைகளை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சின்னம்மைக்கு இணையாகப் பரவும்

    சின்னம்மைக்கு இணையாகப் பரவும்

    முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா கொரோனா பற்றி அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் ரோசெல் பி வாலென்ஸ்கி கூறுகையில், "தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களின் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் எவ்வளவு வைரஸை இருக்குமோ வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும் அதே அளவு வைரஸ் உள்ளது. இதன் மூலம் எளிதாக அது மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது" என்றார். ஆனால் இப்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கை, டெல்டா கொரோனா அவர் குறிப்பிட்டதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறது. மெர்ஸ், சார்ஸ், எபோலா, சளி, காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற வைரஸ்களை விட டெல்டா கொரோனா வேகமாகப் பரவுகிறது. சின்னம்மை நோய்க்கு ஈடாக டெல்டா கொரோனாவும் வேகமாகப் பரவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    தீவிர பாதிப்பு

    தீவிர பாதிப்பு

    மேலும், தீவிரமான பாதிப்புகளையும் ஒப்பிட்டளவில் டெல்டா கொரோனா அதிகமாக ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவால் நமக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாறியுள்ளதாகவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் டெல்டா கொரோனா மிக மோசமான அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆபத்தான டெல்டா கொரோனா

    ஆபத்தான டெல்டா கொரோனா

    டெல்டா கொரோனா பற்றிய கூடுதல் தரவுகளை உள்ளடக்கிய அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. டெல்டா கொரோனா குறித்து தற்போது வரை சேகரிக்கப்படும் தரவுகள் ஆபத்தான வகையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேக்சின் போட்டுக்கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு தீவிர பாதிப்பாக இல்லை என்றும் லேசான பாதிப்பாகவே உள்ளதாகவும் தெரிவித்தார். இது நல்லதொரு விஷயமாகும்.

    1000 மடங்கு அதிகம்

    1000 மடங்கு அதிகம்

    டெல்டா கொரோனா வைரஸ் குறிப்பாகக் காற்றில் தான் வேகமாகப் பரவுகிறது. ஆல்பா கொரோனா வகையைக் காட்டிலும் டெல்டா கொரோனா வகை காற்றில் 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாசி பகுதியில் 1000 மடங்கு கொரோனா வைரஸை அதிகமாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த புதிய பரிந்துரைகளை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Delta variant of the coronavirus may cause more severe illness than all other known versions of the virus and spread as easily as chickenpox. Delta variant might cause more severe disease, according to the document.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X