டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆகவும் அதிகரித்துள்ளது.

 குஜராத்தில் 319 பேர் பலி

குஜராத்தில் 319 பேர் பலி

மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 583 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் இதுவரை 2465 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 5804 பேர் பாதிக்கப்பட்டும் 319 பேர் உயிரிழந்தும் உள்ளனர். டெல்லியில் கொரோனாவுக்க்கு 64 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 4898 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆகவும் அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் மரணமடைந்திருக்கின்றனர். ராஜஸ்தானில் மொத்தம் 3061 பேர் பாதிக்கப்பட்டும் 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 2766 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 50 பேர் மரணித்துள்ளனர்.

ஆந்திராவில் அதிகரிப்பு

ஆந்திராவில் அதிகரிப்பு

ஆந்திராவில் 1717 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது இங்கு 36 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் 1085 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 1259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 133 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

பாதிப்பு இல்லாத கோவா

பாதிப்பு இல்லாத கோவா

27 பேரை பலி கொண்ட கர்நாடகாவில் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கேரளாவில் 500 பேர் பாதிக்கப்பட்டு 462 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் மட்டும் கேரளாவில் மரணித்துள்ளனர். கோவாவில் கொரோனாவால் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தற்போது 7 பேரும் குணமடைந்துள்ளதால் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாகி உள்ளது கோவா.

பஞ்சாப்பிலும் அதிகரிப்பு

பஞ்சாப்பிலும் அதிகரிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் 1233 பேர்; ஒடிஷாவில் 169; ஹரியானாவில் 517; பீகாரில் 528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் குணமடைந்துள்ளனர். சண்டிகரில் 102 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மேகாலயாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

English summary
According to the Ministry of Health and Family Welfare, 3900 Coronavirus cases and 195 deaths have been reported in the last 24 hours, the largest spike till now in both.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X