டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    தொடர்ந்து பரவும் கொரோனா... இந்தியாவில் பாதிப்பு 100 ஆனது

    சீனாவை சிதைத்த கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியிலும் ஈரானிலும் நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    Coronavirus positive cases rises to 93 in Country

    இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலை மத்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 வெளிநாட்டவரும் அடங்குவர்.

    Coronavirus positive cases rises to 107 in Country

    தமிழகத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரத்தநாடு வந்த நபருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவருக்கும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரானில் சிக்கி தவித்த 234 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். டெல்லியில் சிகிச்சை பெற்றுந்த கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    coronavirus

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழையர், தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    The total number of positive cases of Coronavirus in the country rises to 107.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X