டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா, சீனாவின் சீக்ரெட் ஆராய்ச்சி.. நாகாலாந்தில் நடந்த 'வௌவால் வைரஸ்' சோதனை.. கொரோனா பீதி!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாகாலாந்தில் வௌவால்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாகாலாந்தில் வௌவால்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் கிருமிகளை பற்றி இதில் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் இந்த ஆராய்ச்சி பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

அசுரத்தனமான வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 314 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 14500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

எப்படி உலகம் '

எப்படி உலகம் '

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ வௌவால் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் வௌவால்கள்தான் கொரோனா குடும்ப வைரஸ்கள் சிலவற்றை இதற்கு முன் உருவாக்கியது. உதாரணமாக சார்ஸ் நோய் ஒரு வகை கொரோனா வைரஸ் மூலம் உருவானது. இது உருவாக காரணம் வௌவால்தான். அதேபோல் எபோலா, சில வகை ரேபிஸ் நோய்கள் உருவாக காரணமும் வௌவால்தான். அதனால் கொரோனா இப்போது பரவவும் வௌவால் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

என்ன ஆராய்ச்சி

என்ன ஆராய்ச்சி

இந்த நிலையில்தான் நாகாலாந்தில் நடத்தப்பட்ட வௌவால் ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சி அளிக்கிறது. பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. 12 உலகின் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம், சீனாவில் கொரோனா உருவாக காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வுஹன் வைராலஜி துறையும் இதில் ஒரு ஆராய்ச்சி அமைப்பாக இருந்துள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஆம் வௌவால் ஆராய்ச்சியை வுஹன் வைராலஜி துறையும், அமெரிக்காவின் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு எதிர்ப்பு குறைப்பு படை என்ற துறையும், டாட்டா ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்காவின் ஹெல்த் சைன்ஸ் வைரல் ஆராய்ச்சி நிறுவனம், டியூக் தேசிய பல்கலைக்கழகம் சிங்கப்பூர் என்று முக்கிய நிறுவனங்கள் இதில் ஆராய்ச்சி செய்துள்ளது. இவ்வளவு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில், அதுவும் நாகாலாந்தில் ஆராய்ச்சி செய்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இது தொடர்பான அனுமதி வாங்கவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சி என்னவென்றால், நாகாலாந்தில் இருக்கும் வௌவால்கள் எப்படி உயிர் வாழ்கிறது. அதன் உடலில் எப்படிப்பட்ட வைரஸ் கிருமிகள் உள்ளது. இந்த வைரஸ் கிருமிகள் இருந்தும், அவை எப்படி சாகாமல் இருக்கிறது. அதன் எதிர்ப்பு சக்தி எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதேபோல் நாகலாந்து இளைஞர்களிடம் இந்த வௌவால்களில் காணப்படும் ஒருவகை எதிர்ப்பு சக்திகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

கமிட்டி சென்றது

கமிட்டி சென்றது

ஆனால் இந்த சோதனை எதற்கும் அனுமதி வாங்கப்படவில்லை. வௌவாலில் எபோலா, சார்ஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தும் அனுமதி வாங்காமல் சோதனை செய்துள்ளனர். மனிதர்களையும் இதில் நேரடியாக சோதனை செய்துள்ளனர். இதைதான் இந்திய மெடிக்கல் கவுன்சிலின் ஆராய்ச்சி துறை விசாரிக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக நாகாலாந்தில் உள்ள ஆராய்ச்சி தளத்திற்கு 5 பேர் கொண்ட விசாரணை கமிட்டியை அனுப்பி உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

கொரோனா பரவி வரும் நிலையில் இந்த விசாரணை கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே இந்த கொரோனா வைரசுக்கு வௌவால் காரணமாக இருக்கலாம். அமெரிக்கா அல்லது சீனாவின் வுஹன் வைராலஜி மூலம் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது, சரியாக இந்த அமைப்புகள் எல்லாம் நாகாலாந்தில் வௌவால் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது சந்தேகம் தருகிறது. இதன் காரணமாக ஒருவேளை கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Coronavirus: Study on Bat in Nagaland by China to be probed by Center government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X