கொரோனாவை தடுக்க... 6 - 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி
6 முதல்12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கறது. இந்த தடுப்பூசி 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கானது.
Recommended Video
தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இதில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பேராயுதங்களாக விளங்குகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது 18 வயது முடிந்து 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி திட்டம்
12 முதல் 14 வயதான குழந்தைகளுக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடப்படுகிறது. பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும், தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பதாலும் தொற்று பரவல் பெரிய அளவில் அவர்களைப் பாதிக்காது என்று தெரியவந்துள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி
அதே நேரத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து, நேரடி வகுப்புகள் நடைபெறுகிற நிலையில் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காப்பதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை கோவாக்சின் நிறுவனம் தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பு குறித்து தகவலை டிசிஜிஐ இடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஜிஐ உத்தரவு
முதல் இரண்டு மாதங்களுக்கு 15 நாளைக்கு ஒரு முறையும், பின்னர் மாதா மாதம் பாதுகாப்பு தொடர்பான தகவல் புள்ளி விவரத்தை சமர்பிக்க வேண்டும் என டிசிஜிஐ உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு குறைந்து அனைத்து கல்வி நிறுவனமும் வழக்கம் போல் செயல்பட்டுவரும் நிலையில், சில வாரங்களாக பள்ளிக் குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு பதிவாகி வருகிறது. ஏற்கனவே 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 12 வயதுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி
இன்று முதல் நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன் படி பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார்.

5 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி
5 முதல் 12 வயதினருக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தவும் டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சைடஸ் காடில்லா தடுப்பூசி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என கோவிட் தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

188 கோடி டோஸ் தடுப்பூசி
COWIN இணையதள புள்ளிவிவரப்படி இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் சுமார் 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 85.28 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.இரண்டரை கோடிக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications