டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயன் அளிக்காத 3 லாக் டவுன்கள்.. கடந்த 24 மணி நேரம் மிக மோசம்.. இந்தியாவில் கொரோனா படுதீவிரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 2573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இந்தியாவில் இத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Recommended Video

    இந்தியா Lock Down நீக்கியதும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும்-எச்சரிக்கை

    இந்தியாவில் மூன்று லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 42836 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1389 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் இதன் மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 29685 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 11761 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 27.45% பேர் இதுவரை இந்தியாவில் குணமடைந்து உள்ளனர்.

    புதிய எபிசென்டராகும் ரஷ்யா.. வேகமாக உயருகிறது.. உலகம் முழுக்க 2.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை! புதிய எபிசென்டராகும் ரஷ்யா.. வேகமாக உயருகிறது.. உலகம் முழுக்க 2.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

    எத்தனை பலி

    எத்தனை பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அதிகமாக குஜராத்தில் இருந்துதான் 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து 27 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் இருந்து 6 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் இருந்து 3 பேர் பலியாகி உள்ளனர். ஹரியானா, தமிழகம், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் பலியாகி உள்ளார்.

    மகாராஷ்டிரா பலி

    மகாராஷ்டிரா பலி

    மொத்தமாக மகாராஷ்டிராவில்தான் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 548 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 165 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் மொத்தமாக 71 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் 64 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் 36 பேர் பலியாகி உள்ளனர்.

    மேற்கு வங்கம் நிலை

    மேற்கு வங்கம் நிலை

    மேற்கு வங்கத்தில் 35 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் 29 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அளித்த விவரத்தின்படி மொத்தம் மகாராஷ்டிராவில் 12974 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் 5428 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 4549 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    தமிழகத்தில் 3023 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 2942 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 2886 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 2742 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 1650 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 1082 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Worst Numbers in Last 24 hours, Lockdown not helping India it seems with the outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X