அம்பேத்கர் கனவை நனவாக்க முயற்சித்தேன்.. சேவையாற்ற வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி.. ராம்நாத் கோவிந்த்!
டெல்லி: எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரிவு உபசார விழா
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ராம்நாத் கோவிந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பதவியேற்றேன். அனைத்து எம்பி-க்களுக்கும் என் இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். குடியரசுத் தலைவராக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன்.

ஜனநாயகத்தின் கோயில்
ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும். கொரோனா வைரஸ் சூழலை இந்தியா சிறப்பாக கையாண்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.

அனைவருக்கும் நன்றி
அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர் என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications