உச்சநீதிமன்றம் அனைத்திலும் தலையிடாது - தலைமை நீதிபதி சந்திரசூட்.. அன்று மத்திய அமைச்சர் சொன்னாரே?
டெல்லி: உச்சநீதிமன்றம் அனைத்து விவகாரங்களிலும் தலையிட முடியாது என்றும், நீதித்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய வழக்குகளை மட்டுமே தங்களால் கையாள முடியும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்து உள்ளார்.
தீபாவளியை தொடர்ந்து கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் தலைநகர் டெல்லியில் மிகவும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.
வாகன பெருக்கத்தின் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதாலுமே டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

டெல்லி காற்றுமாசு
இந்த நிலையில் டெல்லியில் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்த உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யுயு லலித் அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

நீதிபதி சந்திரசூட்
இந்த நிலையில் யுயு லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்து அண்மையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நாட்டின் 50 வது நீதிபதியாக கடந்த புதன்கிழமை சந்திரசூட் பதிவியேற்றார். அவரது அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது.

அனைத்தையும் தடை செய்ய வேண்டுமா?
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நம்மால் அனைத்தையும் நிறுத்திவிட முடியுமா? என்று மனுதாரர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தலையிட முடியாது
"நீதித்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய வழக்குகளை மட்டுமே நம்மால் கையாள முடியும். உச்சநீதிமன்றத்தால் அனைத்து விவகாரங்களிலும் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது. அதற்கான நேரம் வரும்போது விசாரிக்கப்படும்." என்றார்.

கிரண் ரிஜிஜு
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆற்றிய உரையில், நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கு ஒத்த கருத்தையே கூறி உள்ளார். "டெல்லி உயர்நீதிமன்றம் கொரோனா தொடர்பான முடிவுகளை எடுக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற தலையீடு
உடனே நாங்கள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இது நீதிமன்றத்தில் வேலை இல்லை என்று சொல்ல சொன்னோம். எங்கள் வேலையை உச்சநீதிமன்றம் செய்யக்கூடாது என்று கூறினோம். இதுபோன்ற சவால்களை சமாளிக்கும் இடத்தில்தான் அரசாங்கம் உள்ளது. நான் எங்காவது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட்டு உள்ளேனா? இல்லை.

அரசாங்கம் எதற்கு?
நீதித்துறையை வலுவான அமைப்பாக உருவாக்கவே நான் அறிவுறுத்தி வருகிறேன். நீதிபதிகள் அவர்கள் எதிர்பார்க்கும் பணியை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீதித்துறையே எங்கு சாலை அமைக்க வேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் எதற்கு? எல்லா விசயமும் ஏன் நீதிமன்றத்துக்கு செல்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை." என்று கூறி இருந்தார்.

நீதிபதி சந்திரசூட்
நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞராக சட்டப்பணியை தொடங்கியவர். அதன் பின்னர் சட்ட பேராசிரியராகவும், இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலஹாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டார்.

சிறப்பான தீர்ப்புகள்
2 ஆண்டுகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கப்போகும் இவர், பால் புதுமையினர், ஓரிணச்சேர்க்கை வழக்கு, ஆதார் வழக்கு, மாணவி ஹாதியா மதமாற்ற வழக்கு, சபரிமலை வழக்கு, ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்குகளின் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். கருத்து உரிமை, மனித உரிமைகள் தொடர்பாக இவரது கருத்துக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications