டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சினின் விலை ரூ 200 குறைப்பு.. மாநிலங்களுக்கு ரூ 400 க்கு விற்பனை

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பை தொடர்ந்து கோவாக்சினின் விலையிலும் ரூ 200 ஐ குறைத்துள்ளது பாரத்பயோடெக் நிறுவனம்.

Recommended Video

    #BREAKING கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.200 குறைப்பு!

    பாரத் பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்தன. இதையடுத்து சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன.

     Covaxin Prices Reduced To ₹ 400 From ₹ 600 Per Dose For States

    இந்த இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இதில் கோவாக்சினின் விலை மாநில அரசுகளுக்கு ரூ 600-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1200-க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த விலையேற்றத்தை மாநில அரசுகள் அதிருப்தி தெரிவித்தன. மேலும் விலையை குறைக்குமாறு கேட்டுக் கொண்டன. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு ரூ 200 குறைக்கப்பட்டுள்ளது.

    அதாவது விலை குறைப்பு போக மாநில அரசுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ரூ 400 க்கு விற்பனை செய்யப்படும். ஒரு டோஸ் கோவாக்சினின் விலையில் ரூ 200 குறைக்கப்பட்டுள்ளது. இது 33 சதவீதம் விலை குறைப்பாகும். தனியார் மருத்துவமனைகளுக்கான விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.

    மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி ரூ 100 குறைத்து ரூ 400-லிருந்து ரூ 300 க்கு விற்கப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 22 சதவீதம் விலை குறைப்பாகும்.

    English summary
    Covaxin Prices Reduced To ₹ 400 From ₹ 600 Per Dose For States, announces Bharat Biotech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X