டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

90% மாவட்டங்களில் சரிந்த கொரோனா.. 70 மாவட்டங்களை அச்சுறுத்தும் ஆக்டிவ் கேஸ்கள்.. முழு புள்ளி விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இருக்கும் 650க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90% மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிந்துள்ளன. கடந்த இரண்டு வாரமாக இங்கு மிக குறைவான ஆக்டிவ் கேஸ்களும், புதிய கேஸ்களும் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி வருகிறது. தினமும் இந்தியாவில் பதிவாகும் புதிய கேஸ்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. பலி எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 29,935,221 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

28,844,199 பேர் குணமடைந்து உள்ள நிலையில், 702,858 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 388,164 பேர் பலியாகி உள்ளனர். நேற்று 1,113 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு!

மரணம்

மரணம்

இந்தியாவில் தினசரி கேஸ்கள் 50000 என்கிற ரீதியில் பதிவாகி வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் 650க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90% மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிந்துள்ளன. கடந்த 2 வாரமாக தொடர்ந்து இங்கு கேஸ்கள் வேகமாக சரிந்து வருகின்றன. 70 மாவட்டங்களில் மட்டுமே இந்தியாவில் இன்னும் ஆக்டிவ் கேஸ்கள் குறையாமல் உள்ளன.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் கடந்த ஜூன் 12-19 வரை மொத்தம் 70 மாவட்டங்களில் மட்டுமே ஆக்டிவ் கேஸ்கள் அதிகரித்துள்ளன. இதில் 27 மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த 27 மாவட்டங்கள்தான் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. 18 மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் ஒற்றை இலக்கங்களில் உயர்ந்துள்ளது.

எத்தனை

எத்தனை

இந்த 70 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாவட்டங்கள். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக ஆக்டிவ் கேஸ்கள் குறையாமல் உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டுமே இந்த நிலை மோசமாக உள்ளது. அங்கு கடந்த 20 நாட்களுக்கு முன் ஆக்டிவ் கேஸ்கள் 1.32 லட்சமாக இருந்த நிலையில் 15 ஆயிரமாக குறைந்தது. ஆனால் தற்போது இது ரிவர்ஸ் ஆகி மீண்டும் கேஸ்கள் அதிகரிக்கிறது.

ஏன்

ஏன்

மேற்கு வங்கத்தில் தினசரி கேஸ்கள் 3000 என்ற எண்ணிக்கையில் குறைவாகவே பதிவாகிறது. ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதால் அங்கு ஆக்டிவ் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. தினமும் 2500க்கும் குறைவான நபர்களே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதால், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை சரியாமல் உள்ளது.

வேறு

வேறு

இது போக மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கள் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. மேலும் மஹாராஷ்டிராவில் மும்பை, பல்கார், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மும்பையில் ஆக்டிவ் கேஸ்கள் 21000 ஆக தற்போது உள்ளது. மொத்தமாக நாடு முழுக்க இந்த 70 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் குறைந்துள்ளன.

English summary
Covid 19: 90% districts saw a steady fall in active cases, 70 districts are still in trouble says data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X