டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொள்ளை நோய்களுக்குப் பஞ்சமே இல்லை.. பாடம் கற்றுத் திருந்தத்தான் மறந்து விட்டோம்.. இனியாவது மாறுவோமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நம் உலகில் தோன்றும் ஒவ்வொரு தொற்றுநோய் மூலமும் நாம் பாடம் கற்றுக் கொள்வதை மறந்துவிடுகிறோம். இதனால் ஏராளமான உயிர்களை இழக்கிறோம். முந்தைய காலகட்டத்தில் தோன்றிய தொற்று நோயிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தற்போது ஏற்பட்டிருக்கும் கோவிட் 19 மூலமாவது பாடம் கற்றுக் கொண்டு அடுத்த நோயிலிருந்து தப்பிவிடுவோமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    உலக நாடுகளையே கோவிட் 19 எனும் தொற்றுநோய் உலுக்கி வருகிறது. இது தற்போது பழைய தொற்றுநோய்கள் குறித்து பேசம் வாய்ப்பை கொடுத்துள்ளது. மிக முக்கிய 4 தொற்றுநோய்கள் குறித்து பேசி வருகிறோம். அவை 2009 ஸ்வைன் ப்ளூ, 1968 இல் ஹாங்காங் ப்ளூ, 1957- 58-ஆம் ஆண்டு தொடங்கிய ஏசியன் ப்ளூ, 1918- 1920 ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்பானிஷ் ப்ளூ ஆகியவை ஆகும்.

    இந்த 4 தொற்றுநோய்களை காட்டிலும் கோவிட் 19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்றுவரை மிகவும் குறைவே. இந்த 4 தொற்றுநோய்களில் ஸ்பானிஷ் ப்ளூதான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துதான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நோய் உலகமெங்கும் 4 முதல் 5 கோடி மக்களை கொன்று குவித்துள்ளது.

    திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி

    அழிவுகள்

    அழிவுகள்

    ஒவ்வொரு தொற்றுநோய்களும் ஏற்படுத்தும் அழிவுகள் நம்மால் நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத வடுக்களாகி விடுகிறது. இதனால் ஒவ்வொரு நோயிடம் இருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. புதிதாக தோன்றும் நோயிடம் இருந்து எப்படி தற்காத்து கொள்வது அல்லது எப்படி சிறப்பாக கையாள்வது என்பதுதான் அந்த பாடம். ஸ்பானிஷ் ப்ளூ மற்றும் கோவிட் 19 ஆகிய இரண்டும் விசித்திரமான ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் நாம் சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    அதாவது கோவிட் 19-ஐ போல் ஸ்பானிஷ் ப்ளூவை குணப்படுத்த மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் வந்த காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் உலகம் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது. எனவே ஸ்பானிஷ் ப்ளூவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பது என்ற கேள்விகளுக்கு இடமில்லை. 1940ஆம் ஆண்டுதான் முதல் முதலாக ப்ளூ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

    நோயின் தாக்கம்

    நோயின் தாக்கம்

    அதனால் ஸ்பானிஷ் ப்ளூவிலிருந்து தப்ப லாக்டவுன், சமூக விலகல், முகமூடி அணிதல் மூலமே அந்த நோயிலிருந்து ஓரளவு உலகை காக்க முடிந்தது. அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் முகமூடிகள் அணிந்ததன் மூலமே இந்த நோய் ஓரளவு பரவாமல் தடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்ஃபியா மற்றும் செயிண்ட் லூயிஸ் ஆகிய நகரங்கள் ஸ்பானிஷ் ப்ளூவால் அதிகம் பாதிக்கப்பட்டன.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    செயிண்ட் லூயஸில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் பிலடெல்ஃபியாவில் வழக்கம் போல் இயல்பு வாழ்க்கையை மக்கள் நடத்தி வந்தனர். இதன் விளைவு ஒரு மாதத்திற்கு பிறகு இங்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தது. ஆனால் செயின்ட் லூயிஸ் 700 பேர் மட்டுமே இறந்தனர். ஸ்பானஷ் ப்ளூவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அப்போது தற்செயலாக ஒரு விஷயத்தை கண்டறிந்தனர்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அதாவது குளிர்ச்சியான இடங்கள், மருத்துவமனை அறைகள், நிழல்களில் நோயாளி இருப்பதை காட்டிலும் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமான இடங்களில் வைக்கப்பட்டால் விரைந்து குணமாவதை கண்டறிந்தனர். தற்போது கோவிட் 19 விஷயத்திற்கு வருவோம். 2 நிமிடங்கள் நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்தால் கோவிட் 19 வைரஸ் துகள்களை பாதியாக்குவதாக அமெரிக்காவில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசு

    இந்திய அரசு

    ஏசி அறைகள் தொற்று அதிகரிப்பை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏசிக்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய அரசு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஸ்பானிஷ் ப்ளூ பல்வேறு வழிகளில் இந்த உலகை மாற்றி அமைத்துவிட்டது. ஸ்பானிஷ் ப்ளூவை முதல் உலக போருடன் ஒப்பீடு செய்கிறார்கள். இதில் உலக மக்கள் தொகையில் பாலின விகிதத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இரண்டிலும் ஏராளமான ஆண்களே இறந்துள்ளனர். இதனால் பெண்கள் முதல்முறையாக பணி செய்ய வெளியே வந்தனர். இதனால் 1920-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்கா ஏராளமான பெண் பணியாளர்களை கண்டது. இரண்டு நிகழ்வுகளும் பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்ய வைத்தன.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பிறகே THE Health Organisation 1923-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு அது 1948-இல் World Health Organisanition- ஆக மாறியது. உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தத்திற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கோவிட் 19-ம் கட்டுக்குள் வருவதற்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சலை போல் உலகை மறுவடிவமைத்ததை போன்றோ அல்லது வேறு மாதிரியாகவே செய்யக் கூடும். இரு கொடிய நோய்களிடம் இருந்து நாம் கற்றுக் கொண்டவை - மாஸ்க்குகள், லாக்டவுன், சமூக இடைவெளி, சுத்தமான காற்று, சூரிய ஒளி- இவைதான் அடுத்து வரும் தொற்றுநோயை எதிர்த்து போராடும் கருவிகளாகும். ஏனெனில் இனி வரும் தொற்றுநோய்க்கும் தடுப்பு மருந்தோ, உரிய சிகிச்சையோ இருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    English summary
    Covid 19 and Spanish Flu's are being more in conversations as we forgot the lesson from which killed 5 crore people globally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X