கோவிட் 19 வெளி நாட்டு உதவிகள் உடனடியாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.. மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் பெறப்பட்ட கோவிட் நிவாரண உதவிகள் அனைத்து மாநிலங்களுக்கும். யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் மத்திய கோவிட் -19 நிவாரண மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID19 Foreign aid being promptly delivered to States, UTs: Centre

ஒட்டுமொத்தமாக இதுவரை பெறப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 14 ஆயிரத்து 5 நூறு வென்டிலேட்டர்கள் மற்றும் பிஏபிஏபி, சுமார் 7 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் மற்றும் 12 லட்சம் ஃபாவிபிராவிர் மாத்திரைகள் சாலை மற்றும் ஆகாயமார்க்கமாக உடனடியாக மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன

கடந்த மாதம் 27 ஆம் தேதி நேற்று வரை. கடந்த இரண்டு நாட்களில், சிங்கப்பூர், புருனே, ஓமான், ஒன்டாரியோ (கனடா), எகிப்து, சிங்கப்பூர் ரெட் கிராஸ் சொசைட்டி, சேவா இன்டர்நேஷனல் (ஆஸ்திரேலியா), சுவிஸ் இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸ், (ஹாங்காங்) மற்றும் வோக்ஸ்வாகன் (ஜெர்மனி). ஆகியவற்றிலிருந்து முக்கிய மருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு பெட்டகங்கள் பெறப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு தேவையானது ஆகியவை டெல்லி விமான நிலையத்திற்கு வருகின்றன என்றும் மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+