கொப்பளிக்கும் 'கோவிஷீல்டு' விலை.. இது அடுக்குமா? - உலகிலேயே நமக்கு தான் அதிகமாம்!
டெல்லி: கொரோனா தடுப்பூசியான Covishield, உலகில் வேறு எங்கும் விட இந்தியாவில் அதிகமான விலைக்கு போடப்படுவதாக தெரியவருகிறது.
கோடை வெப்பத்துடன் சேர்ந்து, இந்தியாவில் கொரோனா 2வது அலை மக்களை வதக்கி எடுத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை. மரண ஓலம். பிணங்கள் எரிப்பு என்று இந்திய தேசமே வேதனையில் உள்ளது. (ஐபிஎல் பற்றிலாம் கேட்கக் கூடாது)
தமிழகத்தில் ஆக்சிஜன், ரெமிடிசிவிர் பற்றாக்குறை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தாலும், பல தனியார் மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை இருப்பதை காண முடிகிறது.

விலை என்ன தெரியுமா?
இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள சூழலில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Covishield தடுப்பூசி, ஒரு டோஸுக்கு ரூ .600 என்ற அளவில் இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் போடப்பட உள்ளது. இந்த கொரோனா காலத்தில் உலகிலேயே Covishield தடுப்பூசி அதிக விலைக்கு (ரூ.600) விற்கப்படுவது இந்தியாவில் தானாம். (வித்து தள்ளுங்க!)

ரூ.200 மட்டுமே
இந்த Covishield தடுப்பூசி, புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, ஒரு டோஸுக்கு ரூ .150 என்ற விலையில் லாபம் ஈட்டுவதாகக் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நாங்கள் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு ரூ.200 சிறப்பு விலையை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கியுள்ளோம்... பின்னர், நாங்கள் தனியார் சந்தைகளில் ரூ .1,000க்கு விற்பனை செய்வோம்" என்று அவர் முன்பு கூறியிருந்தார்.

அரசு மருத்துவமனையிலும்
ஆனால், இந்தியாவில் வீசும் கோவிட் 2வது அலை காரணமாக, இப்போதே ரூ.600க்கு மருந்து விற்கப்படுவதாக SII's தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய டோஸ்களின் கொள்முதல் செலவுகளை சமாளிக்க முடியாது என்று மாநிலங்கள் முடிவு செய்தால், மாநில அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் இந்தியர்களும் தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து ஒரு டோஸுக்கு ரூ.400 செலுத்த வேண்டியிருக்கும்.
Recommended Video

அதை விட அதிகம்
ரூ .400 கொள்முதல் விலை என்பது மாநில மற்றும் புதிய மத்திய கொள்முதல் உத்தரவுகளுக்கு பொருந்தும். இந்த விலையானது, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் அஸ்ட்ராசெனெகாவிலிருந்து நேரடியாக மருந்துகளை வாங்கும் தொகையை விட அதிகமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications