ஐடி சட்டம் பிரிவு 66ஏ கீழ்.. எந்தொவரு வழக்கையும் கண்டிப்பாக பதிவு செய்ய கூடாது.. மத்திய அரசு கறார்
டெல்லி: ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டம் பிரிவு 66A கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது எப்படி என உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது
இந்தியாவிலுள்ள ஐடி சட்டம் பிரிவு 66A பல ஆண்களுக்கு முன்பே நீக்கப்பட்ட ஒரு சட்டமாகும். இந்தச் சட்டப்பிரிவின்படி ஆபத்தானது அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களைக் கைது செய்யலாம்,

இந்தச் சட்டம் குறித்துக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஐடி சட்டப்பிரிவு 66 ஏ அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி அந்தச் சட்டம் நீக்கப்பட்டது.
இருந்தாலும்கூட கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்த 11 மாநிலங்கள் மொத்தம் 745 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், ஐடி சட்டம், 2000இன் சட்டப்பிரிவு 66ஏ- ன் கீழ் போலீஸ் நிலையங்களில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என மாநில அரசு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என உள்துறை அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் மாநில அரசுகளை உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications