25 கி.மீ தூரத்தில்தான் ரோடு.. காட்டுக்குள் கிராமம்.. அங்கேயும் கொரோனா.. தடுப்பூசிதான் ஒரே வழி மக்களே
டெல்லி: வனப் பகுதிக்குள் உள்ள காட்டுக்குள்ளும் கொரோனா பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் நக்சல் ஆதிக்கம் கொண்ட சுக்மா மாவட்டத்தில் உள்ளது கர்மா கோண்டி என்ற கிராமம். அருகிலுள்ள நெடுஞ்சாலையிலிருந்து 25 கி.மீ தூரம் பிடிக்கும். அடர்ந்த வனப் பகுதி சூழ்ந்துள்ள பகுதி இது. ஆனால் கடந்த வாரத்தில், இந்த கிராமத்தில் சோதனை செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு, அதாவது 239 பேரில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

நோயாளிகள் கோவிட் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராமமே ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்மா கோண்டி கிராமத்திற்குள், பிபிஇ கிட்கள் அணிந்தபடி சுகாதாரப் பணியாளர்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் முதல் கேஸ், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு கர்ப்பிணி பெண். அவர் மூலமாக பிறருக்கு பரவியுள்ளது.
தகவல் அறிந்து கொரோனா பரிசோதனை குழு மே 19ம் தேதி அன்று, கிராமத்தை அடைந்தது. முதல் நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறகு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது என்கிறார்கள் மருத்துவ குழுவினர்.
"அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருந்தது. நாங்கள் வீடு வீடாக கண்காணிப்பு நடத்தினோம், அறிகுறிகள் உள்ளவர்களை முதலில் சோதித்தோம். " என்கிறார்கள் மருத்துவ குழுவினர். கிராமங்களில் கூட கொரோனா பரவியுள்ள இந்த சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சரியான வழியாக இருக்கும். பரவாது என்ற எண்ணத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவ குழுவினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications