தீபாவளி..கோர்ட் அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.. சீன பட்டாசுக்கு போலீஸ் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி பண்டிகை நாளில் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி அனுமதித்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சீன பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும், புத்தாடைகளும்தான் பலரது நினைவில் வரும்.காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடைகள் அணிந்ததும் பட்டாசுகளை வெடித்தால் தான் பலருக்கு நிறைவை தரும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இல்லாமல் பட்டாசு வெடிக்கின்றனர். பட்டாசு தீபாவளி பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேநேரம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காற்றில் கலப்பதால் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

காவல்துறை

காவல்துறை

இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்படி வரும் 24ம்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

அவசர உதவி எண்கள்

அவசர உதவி எண்கள்

மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அவசர உதவி எண்:112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்:108 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்ததற்கு எதிராக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 848 வழக்குகள் மாநகர காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகள்

பசுமை பட்டாசுகள்

பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விவரம் வருமாறு
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வரை என உச்ச நீதிமன்றம் மொத்தம் 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

காவல்துறை அறிவுரை

காவல்துறை அறிவுரை

பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். பைக், 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் அருகிலும், பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. பட்டாசு கடைகள் அருகில் புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிய கூடாது.

சீனா பட்டாசுகள் விற்க தடை

சீனா பட்டாசுகள் விற்க தடை

பட்டாசு கடைகளில் மெழுகுவர்த்தி, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ உபயோகிக்கக்கூடாது. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாட கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடக் கூடாது.குடிசை பகுதிகளிலும், மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+