ராஜ்நாத்சிங், நிதிஷ்குமார், பசவராஜ் பொம்மை, ஜேபி நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் அஜய் பட், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் காலடி எடுத்து வைத்ததில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று வருகிறது

கொரோனா படுத்தும்பாடு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,70,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாட்டில் தினசரி பி-பாதிப்புகள் சராசரியாக 10,000-15,000 என்று பதிவு செய்யப்பட்டன. தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, ஒடிசா என ஏகப்பட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.

ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சகட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன. முக்கிய பிரமுகர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
''இன்று லேசான அறிகுறிகளுடன் நான் கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்தேன். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் என்னைத் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். தலைநகர் டெல்லியை போட்டு கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,751 புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 23% ஆக உள்ளது.

பரிதவிக்கும் டெல்லி
டெல்லியில் உள்ள 6 பெரிய மருத்துவமனைகளில் இருந்து 750 மருத்துவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நாடாளுமன்ற ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

நிதிஷ், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நிதிஷ்குமார் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதேபோல் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பசவராஜ் பொம்மையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு வார தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்தார். இதேபோல் மத்திய அமைச்சர் அஜய் பட்டு, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications